மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பட்ஜெட்!
1991-ஆம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அன்றைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன்சிங் தாக்கல் செய்த பட்ஜெட்டின் நவீன வடிவமாக கடந்த வியாழக்கிழமை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் அமைந்திருந்தது.1991-ஆம் ஆண்டு முதல் தொடரும் நவீன பொருளாதார கொள்கையை இன்னும் உறுதிப்படுத்துவதே ஜெட்லியின் பட்ஜெட் .
பா.ஜ.க மக்களவை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த பணவீக்கம், நிர்வாக சீரமைப்பு, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொலை நோக்கு பார்வை என எந்த அம்சங்களையும் பட்ஜெட்டில் காணமுடியவில்லை.உணவு, பொது சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு போன்றவற்றிற்கு பெயரளவில் 100, 200 கோடிகள் என ஒதுக்கப்பட்டுள்ளது.2020-ஆ,ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும் என்கிறார் ஜெட்லி.ஆனால், அதற்கு ஈடாக நாடு தழுவிய மின் உருவாக்க, மரபு சாரா மின்சார சக்தி பயன்பாட்டிற்கான எந்த திட்டங்களுமில்லை.ஒவ்வொரு வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை உறுதிப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு நன்றாக இருந்தாலும் அதற்கான செயல்திட்டத்தை நிதியமைச்சர் குறிப்பிடவில்லை.
எதிர்பார்த்ததுபோலவே பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீடு 49 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இத்துறைகளில் அன்னிய முதலீடு என்பது தேச நலனை பாதிக்கக் கூடியது.உணவு மற்றும் எரிபொருட்களுக்கான மானியம் குறைக்கப்படும் என்பதை நேரடியாக கூறினால் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.இவ்வறிவிப்பு சாதாரண, நடுத்தர மக்களின் வாழ்க்கையை நெருக்கடியில் ஆழ்த்துவதாகும்
.பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மீதான வரி குறைப்பு சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பலன் தரும் என்பது தெரிந்த விஷயம்..வேளாண் பல்கலைக்கழகத்திற்கு தமிழகத்தில் வாய்ப்பு இல்லை என்பது ஏமாற்றத்தை தருகிறது.சிறுபான்மை மக்களுக்கு பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் இல்லை.
ஆனால், புனிதப்பயண புத்துயிர்ப்பு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான தேசிய திட்டத்திற்கு (National Mission on Pilgrimage Rejuvenation and Spiritual Augmentation Drive (PRASAD)) ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது..இத்திட்டம் குறித்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.கங்கை நதியை சுத்திகரிக்க ரூ.4,400 கோடியும், படேல் சிலை நிறுவ ரூ.200 கோடியும் தாராளமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இந்துத்துவா சித்தாந்த முன்னோடிகளான தீனதயாள் உபாத்யாயா, ஷியாம பிரசாத் முகர்ஜி, மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.சுதந்திரப்போராட்ட தியாகிகளின் பெயர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தனியார் துறை மற்றும் நகரமய மாதலை மேம்படுத்துவதில் மோடி அரசுக்கு இருக்கும் முனைப்பு பட்ஜெட்டில் தெரிகிறது.
மக்கள் அதிக அளவில் எதிர்பார்த்த அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசியை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது பா.ஜ.கவை நம்பி வாக்களித்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தரும்.வேலை வாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்களும் இல்லை.பொதுவாக சில அறிவிப்புகள் நல்லதாக தென்பட்டாலும் மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க அரசின் பட்ஜெட் பொய்ப்பித்துள்ளது என்பதே உண்மை.
இப்படிக்கு
S. ஷஃபியுல்லாஹ் ,
மக்கள் தொடர்பு அதிகாரி ,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக