ஹமாஸ் இயக்கத்தின் பிரதித் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா ஆற்றிய உரையின் சுருக்கக் குறிப்புகள்.
வீரச் சிங்கங்களே! நீங்கள், தரைவழியிலும் கடல்வழியிலும் வான்வழியிலும் ஏற்படுத்தியுள்ள அடைவுகள் மூலமும் அதிர்ச்சிகள் மூலமும் எங்களையும் எமது மக்களையும் எமது உம்மத்தையும் தலைநிமிரச் செய்துள்ளீர்கள்.
காஸா, போராளிகளின் மண்ணறை. ஹமாஸ் திடவுறுதியுடன் நிலைத்திருக்கும். அதனை கடுமையான முற்றுகையினாலும் கண்மூடித்தனமான தாக்குதலினாலும் அழிக்கலாம் என யாரும் நினைத்தால் அவர் பிரமையில் இருக்கிறார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான கட்டமொன்றின் முன்னாள் நாம் நிற்கிறோம்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆரம்பித்த யுத்தத்தில் எமது நிலத்தையும் எமது மக்களையும் எமது தேசத்தையும் காக்கும் கடமைப்பாட்டுக்கு முன்னால் நாம் நிற்கிறோம்.
எமக்கு பல செய்திகளையும் படிப்பினைகளையும் சுமந்து வரும் போராளிகளின் புத்தாக்கங்களையும் கஸ்ஸாமும் போராளிக் குழுக்களும் தரும் திடீர் அதிர்ச்சிகளையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
காஸா மக்கள் மீது திணிக்கப்பட்ட முற்றுகை அவர்களின் மனவலிமையையும் அவர்கள் போராட்டத் தெரிவையும் உடைப்பதில் வெற்றிபெறவில்லை.
பலவருடங்களாக தொடரும் முற்றுகை பலஸ்தீன மக்களைப் பாதுகாக்கும் வல்லமையைப் பெறுவதிலிருந்து போராளிகளைத் தடுக்க வில்லை.
பலவருடங்களாக திணிக்கப்பட்டிருந்த முற்றுகை இம் மக்களின் மனவலிமையையும் போராளிகள் பலமடைவதையும் உடைப்பதில் தோல்வியடைந்துள்ளது என்பது அவர்களின் திடவுறுதிக்கான முதல் அடையாளமாகும்.
இரண்டாவது அடையாளம், பலஸ்தீனப் போராளிகள் தமது நேரத்தை வீணடிக்கவுமில்லை. அற்ப விடயங்களில் ஈடுபடவுமில்லை. தமது கடமையை விட்டு தூரமாகவுமில்லை என்பதாகும்.
மூன்றாவதாக, ஹமாஸும் பலஸ்தீனப் போராளிகளும் கொண்டிருக்கும் போர்வலிமை எல்லா இடங்களிலும் வாழும் பலஸ்தீன மக்களின் சக்தியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஹமாஸின் பலம் ஒரு குழுவினதோ அல்லது இயக்கத்தினதோ பலமல்ல. அது மக்களைக் காப்பதற்கானது. பலஸ்தீனைப் பற்றி கவலைப்படுகின்ற இந்த உம்மத்தினை உயர்ச்சியடையச் செய்வதற்கானதாகும்.
போராளிகளில் முன்னணியில் திகழும் ஹமாஸ் போராட்டத்திற்கான அனைத்து பலத்தையும் கொண்டிருக்கிறது. அது அரசாங்கத்திடம் காணப்படவில்லை.
பலஸ்தீன மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அவர்களின் தியாகங்களை மதிக்காத எந்த அமைதி உடன்படிக்கையையும் நாம் ஏற்க மாட்டோம்.
போராளிகள் கொண்டிருக்கும் பலம் முழு பலஸ்தீன மக்களுக்குமானது. தனியொரு குழுவுக்குரியதல்ல.
காஸாவிலுள்ள போராளிகள் மேற்குக் கரையிலுள்ள மக்களுடனும் பலஸ்தீனத்தின் அனைத்துப் பகுதியில் வாழும் மக்களுடனும் கைகோர்க்கின்றனர்.
எதிர்ப்புப் போராட்டம், பலம்வாய்ந்தது வைராக்கியம் கொண்டது என்துடன் அது சரியான திசையில் பயணிக்கிறது. அது ஒரு பொறுப்புவாய்ந்த பணி. எவ்வளவு சக்திபடைத்தவர்களாயிருந்தாலும் பலஸ்தீன மக்களினதும் போராளிகளினதும் கோரிக்கைகளை மீறிச் செல்ல யாராலும் முடியாது.
போராளிகளின் தாக்குதலில் முற்றுகை தோற்றுப்போனது. எல்லா போராளிகளும் தமது தேசத்தின் மீதான கடமையை விட்டு தூரமாகவில்லை.
2012 இல் எகிப்தின் கண்கானிப்பின் கீழ் கைச்சாத்திடப்பட்ட அமைதி உடன்படிக்கையின் எல்லா நிபந்தனைகளையும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீறியுள்ளது. குண்டுவீச்சுகளையும் முற்றுகையையும் அதுமேற்கொண்டதுடன் மக்களை கொலையும் செய்தது. பிறகு பெரும் அழிவு நடவடிக்கையை ஆரம்பித்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் வாழ்வைப் போன்று மரணத்தை காதலிக்கும் சரியான பாதையில் செல்லும் போராளிகளை காஸாவில் கண்டுள்ளனர்.
நாம் போரை ஆரம்பிக்க வில்லை. அதை ஆரம்பித்தவன் எதிரிதான். அவன் அதை பகிரங்கமாகவே அறிவித்தான். என்பதை முழு உலகமும் அறிந்து கொள்ளட்டும்.
இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியான முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
பிரச்சினை, அமைதிப்பேச்சிலோ அல்லது அதனை நோக்கி மீளுவதிலோ இல்லை என்பதை எளிமையாக சொல்லிக் கொள்கிறோம். நாம் இந்த யுத்தம் நிறுத்தப்படுவதை விரும்புகிறோம்.
ஊழியர்களுக்கு சம்பளம் வந்தடைய முடியாதவாறான முற்றுகையிலும் பட்டினியிலும் உள்ள காஸாமக்களின் யதார்த்த நிலையே பிரச்சினையாகும்.
காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
எகிப்தின் கண்காணிப்பில் கைச்சாத்திடப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மீறியுள்ளது.
காஸாவிலும் குத்ஸிலும் வாழுகின்ற எமது மக்கள் நாளாந்த கைது நடவடிக்கைகளுக்கு உட்படாமல் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
அறபு, இஸ்லாமிய உம்மத் காஸாவுக்கு சார்பாக நிற்குமாறு கோரிக்கை விடுக்கின்றது.
காஸாவின் வெற்றி நெருங்கி விட்டது.
காஸா, குத்ஸ், மேற்குக்கரைக்கு சார்பாக நிற்கமாறு எல்லா மட்டங்களிலும் உம்மத் கோரிக்கை விடுத்திருக்கிறது.
எமது உறுப்பினர்களும் எமது விடுதலை வீரர்களும் இஸ்ரேலின் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடக்கப்படுகையில் எப்படி நாம் சமாதானம் குறித்து பேசுவது!
சிதறுண்டு வாழும் பலஸ்தீன மக்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது, வெற்றி நெருங்கிவிட்டது. பத்ர் வெற்றியினதும் மக்கா வெற்றியினதும் அய்ன் ஜாலூத் வெற்றியினதும் வாடையை நாம் நுகர்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக