Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 21 ஜூலை, 2014

காஸ்ஸாவில் போராளிகளுக்கு உதவ ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு!


இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஃபலஸ்தீன் முஜாஹிதுகளுக்கு முடிந்த அளவு உதவுமாறு உலக முஸ்லிம்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர் அவையின் தலைவர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி அழைப்பு ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதாரரீதியாகவோ, மனிதநேய பணிகள் மூலமாகவோ அல்லது ரமலானின் கடைசிப் பத்துகளில் பிரார்த்தனைகளின் மூலமாகவோ காஸ்ஸா மக்களின் வெற்றிக்காக முயற்சிக்கவேண்டும் என்று கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
’சியோனிஸ்டுகளுக்கு உதவும் அரபு மற்றும் அரபு அல்லாத நாடுகள், மேற்கத்திய சக்திகளின் வெற்றிக்கொடி உயர அனுமதிக்காதே’ என்று கர்ளாவி அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்துள்ளார். காஸ்ஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை மெளனமாக பார்த்துக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டது என்று கர்ளாவி உலக முஸ்லிம்களுக்கு நினைவூட்டியுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக