அன்பிற்குரியசகோதரர்களே!
2117. அல்லாஹ்வின்தூதர்
(ஸல்) அவர்கள்கூறினார்கள்:
நோன்பு (பாவங்களிலிருந்துகாக்கும்) கேடயமாகும்.
இதைஅபூஹுரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள். (புகாரி)
நோன்பு (பாவங்களிலிருந்துகாக்கும்) கேடயமாகும்.
இதைஅபூஹுரைரா (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள். (புகாரி)
ரமலான் வந்து விட்டாலே மக்கள் மனதில் ஒரு விதமான சந்தோசம் புன்னகை பிறக்கும் ரமலானில் பல்வேறு நிகழ்சிகளும் சூழல்களும் நமக்கு சந்தோசத்தை ஏற்படுத்தும். அந்தசந்தோசத்தில் ஒன்று தான் இப்தாருக்காக பள்ளிவாசலுக்கு நோன்பு திறக்க செல்வது. பள்ளிவாசலுக்கு சென்று கஞ்சி குடித்து அங்கே கொடுக்கப்படும் வடை, போண்டா, சமோசா, போன்றவற்றை சாப்பிட்டு நோன்பு திறந்து விட்டு வருவது பலரும் விரும்பவார்கள் பள்ளியில் காய்ச்சப்படும் கஞ்சி சிறுகுழந்தைகள் சென்று வாங்கி வந்த கஞ்சியை தங்கள் வீ்ட்டில் உள்ள அனைவர்களும் அந்த கஞ்சியை கொன்டு நோன்பு திறப்பது தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் வழக்கமாக உள்ளன.
அல்லாஹ்வின் கிருபையால் நதூரிலும் இந்தநிகழ்வுகள் வருடாவருடம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதே சூழல் நமதூரை சுற்றி இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் நிகழ்கிறதா?என்று இந்த ரமலானில் நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நமதூரை சுற்றியுள்ள N.புதூர், வடகரை, கிருஷ்ணாபுரம், எறையூர், கொரக்காவடி, போன்ற ஊர்களில் போதிய வசதியின்மையின் காரணத்தால் குறிப்பிட்ட நோன்புகளுக்கு பிறகு கஞ்சி காய்ச்சுவதில்லை. சிலவருடங்களுக்கு முன்பு நமதூரின் நிலையும் இப்படி தான் இருந்தது. ஆனால் இன்று அல்லாஹ்வின் கிருபையால் அந்த சூழல் மாற்றமடைதுள்ளது. இப்படி ஒரு பரக்கத்தை அல்லாஹ் நமதூருக்கு கொடுத்திருக்கும் போது நம்மை விட கீழ் உள்ளஊர்களுக்கு கொடுத்து உதவுவது நமது கடமை என்பது நாம் உணர வேண்டும்.
நபிஸல் அவர்கள் கூறினார்கள்
எவர் ஒரு வரை நோன்பு திறக்கவைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் கூலியை போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்படமாட்டாது.. (அஹமத், திர்மிதி)
இதன் அடிப்படையில் நமது புஷ்ரா நல அறக்கட்டளை கடந்த 5 வருடங்களாக இந்த ஊர்களுக்காக வசூல் செய்து கொடுத்து அவர்களும் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி செய்து வருகிறது. இந்த வருடமும் வசூல் செய்து உதவ புஷ்ரா நல அறக்கட்டளை நாடியுள்ளது. ஆகவே இந்த ஊர்களுக்கு இப்தார் கஞ்சி காய்ச்ச நாட்டமுள்ளவர்கள் அதிக அளவில் கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
அன்புடன்
தலைவர்:
M.அன்சர்பாஷா 9585358592
வி.களத்தூர்.
A.அப்துல்லாபாஷா
050-3878421
துபை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக