பா.ஜ.க பட்ஜெட் 1
# பாதுகாப்பு மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதல் இரட்டிப்பு. இந்த ஆண்டு முதல் 49 சத FDI.
# பொதுத் துறைகள் தனியார் மயம். இந்த ஆண்டு முதலீட்டி நீக்க இலக்கு 58,425 கோடிகள்.
# உற்பத்தித் துறை மற்றும் e வணிகத்திலும் அந்நிய முதலீடு.
# இந்திய உணவுக் கார்பொரேஷன், பொது வினியோக அமைப்பு முதலானவற்றை ஊக வணிகர்களுக்குச் சாதகமாக மறு சீரமைப்புச் செய்தல்.
# இரண்டாவது பசுமைப் புரட்சி என்கிற பெயரில் விவசாயத்தை கார்பொரேட் மயமாக்குதல்,
# துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதி வேகச் சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், 16 மெட்ரோக்கள், 100 ஸ்மார்ட் நகரங்கள் என எல்லாவற்றையும் 'தனியார் - பொதுத்துறை கூட்டு என்கிற பெயரில் தனியார் மயப்படுத்தல்.
# கார்பொரேட் வரி விலக்கு 5 லட்சம் வரை.
பா.ஜ.க பட்ஜெட் பற்றிப் பலரும் கருத்துச் சொல்லியுள்ளனர். இதில் இதில் ரொம்ப சூப்பராகவும், மிகச் சரியாகவும் கருத்துச் சொல்லியுள்ளது சோனியா அம்மையார்தான்.
"எங்களை அப்படியே காப்பி அடித்துள்ளனர்" என்பதுதான் அது.
எல்லாம் இப்படி சீரியசாகவே பேசிக் கொண்டிருந்தால் எப்ப்பிடி. கமான் வை.கோ . ஏதாவது சொல்லுங்க. அமித் ஷா பா.ஜ.க தலைவரானதற்குப் பாராட்டுச் சொன்னது மாதிரி.
நன்றி முகநூலிருந்து
அ.மார்க்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக