மேற்கு பள்ளி வாசலுக்கு சரியாக பகல் 12 மணியளவில் மு.க.ஸ்டாலின் மேற்கு மஹல்லா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார்.
அப்போது மேற்கு மஹல்ல தலைவர் எம்.சுல்தான் மொய்தீன் அவர்கள் பேசும்போது லெப்பைக்குடிக்காடு என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக்க வேண்டும்.
பிச்சனைக்குரியதாக உள்ள புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.
இன்னும் பல பிரச்சனைகளை எடுத்துரைத்ததோடு இது சம்மந்தமான மனு ஒன்றையும் அளித்தார்.
மேலும்..வருங்கால முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் எங்களின் முழு ஆதரவு எப்போதும் தி.மு.க விற்கு உண்டு என்ற வாக்குறுதி வழங்கினார். (கூடியிருந்த மக்கள் நாரே தக்பீர்- அல்லாஹூ அக்பர் என்று முழக்கமிட்டனர்).
மனுவை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் நல்லதொரு தீர்வை தமது தலைமையிலான அரசு நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார்.
நன்றி குளோபல் செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக