சென்னை: மது ஒழிப்பிற்காக “டாஸ்மாக்கை மூடு” மற்றும் “ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு” என்ற பாடலை இயற்றி பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது.
“மூடு டாஸ்மாக்கை..!” என மதுபான கடைகளை இழுத்து மூடும் போராட்டத்தை கையிலெடுத்துவரும் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் அமைப்பான ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு அம்சமாக “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு, இன்னும் எத்தனை பிள்ளைகள் குடிச்சி சாகணும், எத்தனை தாலிகள் அறுக்கணும், மூடு டாஸ்மாக்கை மூடு” எனும் பாடலை வெளியிட்டு, அதை கலை வடிவத்தில், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீதிநாடகமாக நடத்தி வந்தார்கள்.
இந்நிலையில், இந்தப் பாடலை இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை, இன்று அதிகாலை 2.30 மணிக்கு திருச்சி குழுமணி அருகில் உள்ள அரவனூரில் போலீசார் திடீரென கைது செய்து செய்தனர். இதனையடுத்து சென்னை கொண்டு வரப்பட்ட அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது தமிழக அரசு.
இந்நிலையில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைதுக்கு
எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி, அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்களும் அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக