Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 அக்டோபர், 2015

இந்திய ரயில்களில் அதிகாரிகள் உதவியுடன் போலி தண்ணீர் பாட்டில்! - சி.பி.ஐ தகவல்

இந்திய ரயில்களில் விற்கப்படும்  ‘ரயில் நீர்’ பாட்டில்களுக்கு பதிலாக போலியான தண்ணீர் பாட்டில்கள் விற்கப்பட்டுள்ளது சி.பி.ஐ அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த முறைகேடு ரயில்வே
அதிகாரிகளின் உதவியுடன், ரயில்வே காண்டிராக்டர்கள் போலியான தண்ணீர் பாட்டில்களை ரயில்களில் விற்பனை செய்துள்ளதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் தேவ்பிரீத் சிங் கூறும்போது, “வட மாநிலங்களில் இயக்கப்பட்டு வரும் ராஜ்தானி, ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில், ரயில்வே நிர்வாகத்தால் ‘ரயில் நீர்’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

இந்த ரயில்களில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீரை ஆர்கே அசோசியேட், சத்யம் கேட்டரர்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் விநியோகித்து வருகின்றன. தனியார் நிறுவனங்களுக்காக ஒதுக்கப்படும் ‘ரயில் நீர்’ பாட்டில்கள் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்ததால், இந்திய ரயில்வே உணவு விநியோகம் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி) ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தது.

இதையடுத்து, ‘ரயில் நீர்’ பாட்டில்கள் விரைவு ரயில்களில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனாலும், ரயில்வே துறை தலைமை வணிக மேலாளர்கள் எம்.எஸ்.சாலியா, சந்தீப் சிலாஸ் ஆகியோரின் உதவியுடன் ‘ரயில் நீர்’ அல்லாத மலிவான விலையில் வெளிச்சந்தையில் கிடைக்கும் குடிநீர் பாட்டில்களை விரைவு ரயில்களில் தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்து வந்துள்ளது.

இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், மோசடியில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் 2 பேரின் வீடுகளிலும், தனியார் நிறுவன அலுவலகங்கள், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனை மேற்கொண்டனர்.

அந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.20 கோடியும், குற்ற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும், இது தொடர்பாக வடக்கு மண்டல ரயில்வேயின் முன்னாள் வணிக மேலாளர்கள் சாலியா மற்றும் சந்தீப் சிலாஸ் மீதும், 7 தனியார் நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக