கோவை: கோவையில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஜவாஹிருல்லாஹ், தமீமுன் அன்சாரி
ஆதரவாளர்களுக்கு இடையே கடும் வாக்கு வாதம் தள்ளு முள்ளு ஏற்ப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை குனியமுத்ததூரில் உள்ள திருமண மண்டபத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் தமுமுக மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் மனித நேய மக்கள் கட்சியின் இன்னொரு தனிப்பிரிவாக இயங்கும் தமீமுன் அன்சாரியின் ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரு பிரிவுனருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதம் முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் பொதுக்குழு கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக