Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 8 அக்டோபர், 2015

தமிமுன் அன்சாரி ஓர் களப்போராளி....!!

தமிமுன் அன்சாரி ஓர் களப்போராளி....!!
தமிமுன் அன்சாரி நாகை மாவட்டம் தோப்புத்துறையை சேர்ந்தவர், MBA படித்தவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில செயலாளராக இருந்தவர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர்,

தமிமுன் அன்சாரி துடிப்பு மிகுந்த களப்போராளியாவார், தமது உணர்ச்சி மிகுந்த பேச்சாலும், வசீகர குரலாலும் தமுமுகவிலுள்ள இளைஞர்களை தன் வசம் ஈர்த்தார்,
மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பிரசாரம் செய்து மமகவை வலுப்படுத்தினார்.

சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த களப்போராளி என்று அவரது பாராட்டு பத்திரங்கள் நீண்டு கொண்டே செல்லும்,
சகோதர இயக்கங்களுடன் நெருங்கி பழகக்கூடியவர், சகோதர சமுதாய இயக்க தலைவர்களான திருமாவளவன், சீமான் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் நேசத்துடன் பழகக்கூடியவர்,
மனிதநேய மக்கள் கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று முகநூலில் பலர் பலவிதமாக எழுதி வருவதை காண முடிகிறது.
தமிமுன் அன்சாரி தனி இயக்கம் காண்பதோ அல்லது தனி கட்சி தொடங்குவதோ அது சமுதாயத்தை மேலும் பிளவுப்படுத்தும்,
மேலும் தமிழக முஸ்லிம்களை பொறுத்தவரையில் தனி இயக்கம் தொடங்கி வெற்றிகரமாக கொண்டு செல்லும் ஆற்றல் கடந்த 25 ஆண்டுகளில் இருவரிடம் மட்டுமே இருப்பதை கண்டு வருகிறோம்,
அதில் ஒருவர் இறந்து விட்டார், அவரது இறப்பிற்கு பின் அவரது இயக்கமும் செயல்படாமல் போய்விட்டது.
இன்னொருவர் வெற்றிகரமாக இயக்கத்தை வளர்த்து விட்டார்.

தனி இயக்கம் தொடங்குவது சுலபம் என்றாலும் அதை வெற்றிகரமாக கொண்டு செல்வது என்பது சாத்தியமற்றது என்பதை கண் கூடாக காண முடிகிறது.
எத்தனையோ இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றினாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்கங்களே செயலாற்றி வருகிறது,

ஆகையால் தமிமுன் அன்சாரி தனி இயக்கம் தொடங்கி மேலும் மக்களை பிளவுப்படுத்தாமல் இருக்கக்கூடிய இயக்கங்களில் சிறந்த இயக்கமாக தேர்வு செய்து அதில் மறுமை நன்மைக்காகவும், அல்லாஹ்வுடைய திருப்திக்காகவும் களப்பணியாற்றி சமுதாய சேவையாற்ற வேண்டும்.
இதையே வெகுஜென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக