திருவனந்தபுரம்,: ”மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக, கேரளாவில் போராட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை,” என, அம்மாநில பா.ஜ., தலைவர்
முரளீதரன் கூறினார்.
கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கக் கோரி, நாட்டின் பல பகுதிகளில் பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ‘கேரளாவிலும், இதுபோல் போராட்டம்
நடத்தப்படுமா’ என, அம்மாநில பா.ஜ., தலைவர் முரளீதரனிடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியதாவது:நம் நாட்டை பொறுத்தவரை, மாநிலத்துக்கு மாநிலம், உடைகளும், உணவுகளும் வேறுபடுகின்றன. அந்தந்த மாநில கலாசாரம், வானிலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு சாப்பிடுவதையும், உடையணிவதையும் மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.எனவே, மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கக்கோரி, கேரளாவில், பா.ஜ., சார்பில் போராட்டம் நடத்தப்படாது.
எங்கள் கட்சியின் விதிமுறைகளில், உணவு நடைமுறையை முறைப்படுத்துவது தொடர்பாக எந்த விஷயமும் இல்லை. மற்ற மாநிலங்களில் நடத்தப்படும் போராட்டம் பற்றி, எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. என திடீர் பல்டி அடித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக