நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான ‘வால்மார்ட் ஸ்டோர்ஸ்’ 2007–ம் ஆண்டு இந்தியாவில் கால் பதித்தது.
ஆரம்பத்தில் பார்தி நிறுவனத்துடன் கூட்டாக சூப்பர் மார்க்கெட் வணிகத்தில் ஈடுபட்ட வால்மார்ட் 2013–ம் ஆண்டு முதல் தனியாக மொத்த விற்பனை வியாபாரத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய்களை லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அமெரிக்க அரசு கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணையில் இந்திய வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக உள்ளூரில் சிறிய அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோருக்கு லஞ்சம் கொடுத்து இருப்பது கண்டறியப்பட்டது. இப்படி பல கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு உள்ளதை அமெரிக்க விசாரணைக்குழு கண்டறிந்து இருப்பதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘வால் ஸ்டீரிட் ஜேர்னல்’ தகவல் வெளியிட்டு உள்ளது.
குறிப்பாக, சுங்க அனுமதி மற்றும் ரியல் எஸ்டேட் அனுமதியைப் பெறுவதற்காக இந்த தொகை லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக