பிரிவினைகளும், புதிய இயக்கங்களின் வருகையும் தமிழகத்திற்கு புதியதல்ல.அதற்காக அழுது புலம்பியோ, வருத்தப்பட்டோ எந்த புண்ணியமும் கிடைக்கப்போவதில்லை.இன்றைய பெரும்பாலான இயக்கங்களிடம் அடுத்த ஐந்தாண்டுக்கான ஏதேனும் செயல்திட்டம் கைவசம் உள்ளதா?என்று கேட்டுப் பாருங்கள்!எதுவுமே இருக்காது.இந்தியாவில் முஸ்லிம்களின் சமூக வாழ்க்கையை நெறிப்படுத்துவது எப்படி?இந்தியாவில் முஸ்லிம் அரசியல் கொள்கையை எவ்வாறு வடிவமைக்கவேண்டும்? பன்முக சமூகத்தில் நமது அரசியல்,
சமூக நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும்?பாசிச சங்க்பரிவார சக்திகள், அரசு பயங்கரவாதம் இவற்றில் இருந்தெல்லாம் முஸ்லிம் சமூகம் தன்னை தற்காத்துக் கொள்வது எப்படி? முஸ்லிம் சமூகம் அனைத்து துறைகளிலும் எவ்வாறு தம்மை பலப்படுத்திக்கொள்ளவேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? இது போன்ற சமகால அரசியல், சமூக, கலாச்சாரம் தொடர்பான எக்கச்சக்கமான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இருக்காது.அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடும் எண்ணம் பலரிடம் கிடையாது.இந்நிலையில் சமூக நலன்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு சுய நலன்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் இயக்கங்கள் இருக்கும் காலமெல்லாம் பிரிவினைகள் தொடர்கதையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக