ஹஜ்ஜின்போது உயிரிழந்த ஹஜ் தன்னார்வலர் பெயரில் வரும் ஆண்டுகளில் விருதுகள் வழங்கப்படும் என்று சவூதி இந்திய தூதரக துணைத் தூதுவர் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஹஜ்ஜின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்காணோர் படுகாயமடைந்தனர்.
உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தின்போது ஹாஜிகளுக்கு உதவி புரிந்துகொண்டிருந்த 'இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம்' ( IFF ) தன்னார்வலர் நியாசுல் ஹக்(ஜார்கண்ட் மாநிலம்) நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
இவருக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ஜித்தா இந்திய தூதரகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இந்திய துணைத் தூதுவர் பி.எஸ்.முபாரக், "வரும் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றும் ஹஜ் தன்னார்வலர்களுக்கு மறைந்த நியாசுல் ஹக் பெயரில் விருதுகள் வழங்கப்படும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான இந்தியர்கள் கலந்துகொண்டு மறைந்த நியாசுல் ஹக்கிற்கு இரங்கல் தெரிவித்தனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக