பணம் இருந்தால் மட்டுமே இனி கல்வி என்ற நிலையை கொண்டுவர நமது இந்திய அரசு ஆயத்தம்.
கொஞ்சமாக கிடைத்துவந்த இலவசக்கல்வியும் இனி கிடைக்காது அதுதான் நிலை.
ஆம் எதிர்வரும் டிசம்பர் 15 ம் தேதி கென்யாவின் நைரோபியில் 160 நாடுகள் கலந்து கொள்ளும் உலக வர்த்தக மையத்தின் பத்தாவது வட்ட அமைச்சக மாநாடு நடக்கவிருக்கிறது.அதில் கல்வித்துறைக்குள் வெளிநாட்டு நிறுவனங்களை திறந்துவிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது இந்தியா.
இவ்வாறு கையெழுத்திட்டு நமது நாட்டிற்குள் கல்வியை வியாபாரம் செய்ய அவர்கள் வரும் போது,வியாபார போட்டியாக எது இருந்தாலும் அது அப்புறபடுத்தபட்டு வெளிநாட்டு முதலாளிகளின் லாபம் கொளிப்பதற்காக வழிவகை செய்து கொடுக்கப்படும் நமது அரசால்.
அவ்வகையில் அவர்களுக்கு போட்டியாக இருப்பது அரசாங்கம் கல்வியில் நமக்கு கொடுத்துவரும் இலவச கல்விகளும்,சலுகைகளும் மற்றும் மானியங்களுமே.நிச்சயம் இது நம்மை விட்டு பறிக்கப்பட போவது உறுதியே!
அப்போது கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக்கப்படும் என்பதும் உறுதியே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக