புதுடெல்லி: மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள் என்று பொய்ச் செய்தியைப் பரப்பி உத்திரப் பிரதேசத்தில் முஹம்மது அஃக்லாக் என்ற அப்பாவி முஸ்லிம் அநியாயமாக ஃபாசிச பயங்கரவாதிகளால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசாததைக் கண்டித்து பிரபல இலக்கியவாதி நயன்தாரா செஹ்கல் தனக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாதமி விருதை அரசுக்கே திரும்ப அளித்தார். அவரைத் தொடர்ந்து வரிசையாக பலர் தாங்கள் பெற்ற விருதுகளை மத்திய அரசுக்கு திரும்ப அளித்து வருகின்றனர். இது பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளாக நயன்தாரா செஹ்கலுக்கு 1986ம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. எழுத்தாளரும் சமூக சேவகருமாக கல்புர்கி, அவருக்கு முன் ஃபாசிசவாதிகளால் கொலை செய்யப்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள் என்று யார் குறித்தும் மோடி வாய் திறக்காததைக் கண்டித்து நயன்தாரா தன் விருதைத் திரும்ப அளிப்பதாக அறிவித்தார்.
அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் அசோக் வாஜ்பாயி தான் வாங்கிய விருதை திரும்ப அளித்தார். அவரைத் தொடர்ந்து பிரபல மலையாள பெண் எழுத்தாளர் சாரா ஜோசப் தன் சாகித்திய அகாதமி விருதைத் திரும்ப அளித்தார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் அமன் சேத்தி தன் சாகித்திய அகாதமி விருதைத் திரும்ப அளித்தார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளர் ஜி.என். டெவி தான் வாங்கிய சாகித்திய அகாதமி விருதைத் திரும்ப அளித்தார்.
மேலும் மூன்று பஞ்சாபி எழுத்தாளர்களும் தங்கள் சாகித்திய அகாதமி விருதைத் திரும்ப அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து சாகித்திய அகாதமி நிர்வாகக் குழுவில் இருப்பவர்கள் தங்கள் பதவிகைளை இராஜினாமா செய்து வருகிறார்கள். சாகித்திய அகாதமி பொதுக் குழு உறுப்பினரும், கன்னட எழுத்தாளருமான அரவிந்த் மலகாட்டி தன் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
மேலும கவிஞர் சச்சிதானந்தன் தான் வகித்த அனைத்து சாகித்திய அகாதமி பொறுப்புகளிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக