தேசம் சுதந்திரம் பெற்று பாதுகாக்கப்பட்ட 68 ஆண்டுகால மதசார்பின்மையும்,சகோதரத்துவமு ம் இன்றைய பாசிஸ பாஜகவின் ஆட்சியாளர்களால் குழி தோண்டி புதைக்கப்படும் பேராபத்து உருவாகியுள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளான விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பு,கருப்பு பண மீட்பு,தேசிய நதிநீர் இணைப்பு போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றாமல்….
முஸ்லிம்களையும்,கிருஸ்தவர்களை யும் ஆயுதங்களின் முனையில் அச்சுறுத்தி இந்துக்களாக மாற்றுதல்,சமஸ்கிருதம் மற்றும் பகவத் கீதையை சிறுபான்மை மக்களின் மீது கட்டாயமாக திணிக்கும் முயற்சி,
கிருஸ்தவர்களின் கிருஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்கும் விதமாக அன்றைய தினம் R.S.S தலைவர் மோகன் மாளவியா மற்றும் வாஜ்பேயி உள்ளிட்டோரின் பிறந்த தின விழாவென்னும் பெயரில் மத்திய அரசின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் வேலை நாட்கள் என்ற அறிவிப்பு,
இந்தியா இந்து தேசம் என்னும் பிரகடனம்,பொதுசிவில் சட்டம் போன்ற இன்னும் பல்வேறு மக்கள் விரோத செயல்களை நிறைவேற்ற துடிக்கும் பாசிஸ பாஜகவின் மோடி அரசு ஒட்டு மொத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தையும் மாற்ற துடிக்கும் போக்கினால்…
இந்தியாவில் வாழும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமை பற்றிய சமூக அக்கறையுடன் உலகின் பல்வேறு நாடுகளும் பாஜகவின் பாசிஸ அணுகுமுறைகளை மிகவும் உன்னிப்பாய் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பாசிஸ பாஜகவின் சிறுபான்மையினரின் மீதான அத்துமீறல் தொடருமானால்…தேசத்தின் அமைதி சீர்குலைந்து பல்வேறு வன்முறைகள் நிகழும் பட்சத்தில் ஐக்கிய நாடுகளின் தலையீடு தவிர்க்க முடியாததாகி விடும்?
பாஜகவின் தற்போதைய போக்கினால் இந்திய நாணய மதிப்பில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டு கடும் விலைவாசி உயர்வை தேசம் சந்தித்து வருகிறது.இந்நிலையில் மதவாதம் மட்டுமே தங்களது ஆட்சியின் அடையாளம் என பாஜக கருதுமானால்….
தேசத்தின் ஒற்றுமையையும்,நல்லிணக்கத்தையு ம் கேள்விக்குறியாக்கும் பாசிஸ பாஜகவின் அடாவடியை கண்டித்து மதசார்பின்மை சக்திகள் ஓரணியில் திரண்டு தேசம் முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடத்திட முன்வர வேண்டும்.இதுதான் நல்லோர்களின் எதிர்பார்ப்பு.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக