புதுடெல்லி: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று டிசம்பர் 6 அன்று டெல்லியில் அரசியல், மத, மனித உரிமை இயக்கங்களின் தலைமையில் ஒருங்கிணைந்த பேரணி நடைபெற்றது.வகுப்புக் கலவரங்களுக்கும், துவேச பிரச்சாரங்களுக்கும்
ஆட்சியாளர்களும், மக்கள் பிரதிநிதிகளும் தலைமை வகிப்பது தொடர்கதையாகும் சூழலில்,’சமநீதி மலரும் இந்தியாவை சாத்தியமாக்கும்வோம்’ என்ற லட்சியத்தோடு பேரணியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டவேண்டும், மஸ்ஜிதை இடிக்க தலைமை வகித்த எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரை சிறையில் அடைக்கவேண்டும் ஆகிய முழக்கங்கள் பேரணியில் எழுப்பப்பட்டன.நூற்றுக்கணக்கானோ ர் பேரணியில் கலந்துகொண்டனர்.காலை 11 மணிக்கு புதுடெல்லி மந்திஹவுஸில் இருந்து துவங்கிய பேரணி ஜன்பத் வழியாக ஜந்தர்மந்தரில் முடிவடைந்தது.பேரணியின் இறுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர்.
மதசார்பற்ற கொள்கை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை தடுப்பதற்காக கருத்துவேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தலைவர்கள் தங்களது உரைகளில் தெளிவுப்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் என்.டி.பஞ்சோலி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் எ.ஸயீத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் மவ்லானா உஸ்மான் பேக், வெல்ஃபெயர் பார்டியின் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்யாஸ், லோக்ராஜ் சங்கடன் என்ற அமைப்பின் எஸ்.ராகவன், முஸ்லிம் மஜ்லிஸே முஷாவராவின் அன்வாருல் இஸ்லாம், கவிதா கிருஷ்ணன், சீக்கிய பேரவையின் அர்மீந்தர் சிங், ஜமாஅத்தே இஸ்லாமியின் முஹம்மது, கட்டார் பார்டியின் பிரகாஷ் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக