கெய்ரோ : இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முதலாக அரபியில் மொழியாக்கம் பெற்றுள்ளது.
எகிப்தில் உள்ள அரபு லீக் நாடுகளின் தலைமைச் செயலகத்தில், இந்திய தூதரகம் மற்றும் அரபு லீக் நாடுகள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இம்மொழியாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அரபு லீக் நாடுகள் பொதுச் செயலாளர் நபில் அல் அரபி மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக செயலாளர் (கிழக்கு பகுதி) அனில் வத்வா இணைந்து வெளியிட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த எகிப்திற்கான இந்திய தூதர் நவ்தீப் சூரி, “இது ஓர் மைல் கல்” என்றார்.
நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்திய அரபு லீக் நாடுகள் பொதுச் செயலாளர் நபில் அல் அரபி “அனைத்து தரப்பு சமூகத்திற்குமான அரசியல் சட்டமாக இந்திய சட்டம் வரைவு செய்துள்ளது பாராட்டத்தக்கது” என்று சிலாகித்து கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக