டெல்லி : பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
மோடி அரசின் இந்த முடிவு, இந்திய வெளியுறவு கொள்கையின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி என விமர்சிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அரசு
வட்டாரத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற இரண்டு முக்கிய தகவல்களுமே, ஐ.நா. மன்றத்தில் இதுநாள்வரை பாலஸ்தீன கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளித்து வந்த நிலையில், இம்முறை பாலஸ்தீன கோரிக்கைக்கு ஆதரவு அளிக்காமல் விலகி நிற்பது தொடர்பாக தீவிரமாக பரிசீலித்து வருவதாக உறுதிபடுத்தியுள்ளது.
அரசின் இந்த பரிசீலனைக்கு நிர்வாக ரீதியில் ஒப்புதல் மட்டுமே பெற வேண்டியிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, இஸ்ரேலுடன் இந்தியா பாதுகாப்பு, தூதரக வட்டத்தில் நெருக்கம் காட்டினாலும், பாலஸ்தீனத்துக்கான ஆதரவு என்று வரும்போது வெளியுறவு கொள்கையில் சமரசம் செய்யத் தயாராக இல்லை.
அதேபோல், 2003-ல் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷேரோனுக்கு இந்தியா வர அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஐ.நா. மன்றத்தில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதை இந்தியா நிறுத்தவில்லை.
ஐ.நா. மன்றத்தில் பாலஸ்தீன் மீதான நிலைப்பாட்டை இந்தியா தளர்த்திக் கொள்ளாதது இஸ்ரேல் – இந்தியா உறவில் நெருடலாகவே இருந்ததுவருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீனத்திற்கு இந்தியா அளித்து வந்த ஆதரவை நிரந்தரமாக திரும்பப் பெற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி இஸ்ரேலுக்கு இனிய இசையாகவே ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக