Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

எபோலாவுக்கான புதிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்த சீனா!!

பீஜிங்: மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் மக்களை அச்சுறுத்தி வருகின்ற கொடிய நோயான எபோலோவிற்கான தடுப்பு மருந்தினை சீனா கண்டு பிடித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபிரியா, கினியா, சியாரா லியோன் ஆகியவற்றில் 7000 க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய எபோலா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொடிய எபோலா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய தடுப்பு மருந்தை இம்மாத இறுதியில் மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்ய உள்ளது சீனா.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன், “சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைசிறந்த ஆராய்ச்சி அலகுகளில் ஒன்றான இராணுவ மருத்துவ அறிவியல் அகாடமியால் இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும், ராணுவ அதிகாரிகளும் சமீபத்தில் இந்த தடுப்பு மருந்துக்கு அனுமதி அளித்துள்ளதால் இந்த மாதத்தில் இதற்கான மருத்துவ சோதனைகள் தொடங்கும்” என்றார்.
எபோலா தடுப்பு மருந்தினை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தும் உலகின் மூன்றாவது நாடு சீனா என்பதும், இது உலகின் முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட எபோலா தடுப்பு மருந்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக