புதுடெல்லி: 1959-ஆம் ஆண்டு முதல் பாபரி மஸ்ஜித் வழக்கில் சட்டப் போராட்டத்தை தொடரும் 90 வயதான முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி வழக்கிலிருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.வழக்கில் தொடரவிரும்பவில்லை என்றும், எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்றும் அன்ஸாரி,
ஊடகங்களிடம் தெரிவித்ததாக தகவல். மேலும் அவர் கூறுகையில்,’வழக்கு தொடர்பாக தற்போது நடப்பதெல்லாம் அரசியல் தூண்டுதலாகும்.மனம் வெறுத்துப்போய் வழக்கிலிருந்து விலகுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக பாபரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழு கன்வீனர் வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜீலானி கூறியதாவது:பாபரி மஸ்ஜித் நில உரிமைக்கான வாதத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம்.அன்ஸாரி விலகியது, வழக்கை எவ்வகையிலும் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார்.
அன்ஸாரியின் முடிவுக்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்துள்ளது.வழக்கிலிருந்து விலக அன்ஸாரியின் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக