காபூல்: பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் தாலிபான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தாலிபான் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
நிரபராதிகளான குழந்தைகளை கொலை செய்வது இஸ்லாத்திற்கு எதிரானது. குழந்தைகள், பெண்கள் உள்பட நிரபராதிகளை கொலை செய்வது இஸ்லாத்தின் சட்டங்களுக்கு எதிரானது. அனைத்து இஸ்லாமிய அரசுகளும், இயக்கங்களும் இதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய சட்டங்களில் இருந்து யாரும் வழி தவறக் கூடாது.
இவ்வாறு ஆப்கானிஸ்தான் தாலிபான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெஷாவர் பள்ளிக்கூடத்தில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய தெஹ்ரீகே தாலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்புக்கும், ஆப்கானிஸ்தான் தாலிபானுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக