Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 11 டிசம்பர், 2014

ரேசன்கார்டு பெற்றுத் தருவதாக கூறி ஆக்ராவில் கூட்டு மதமாற்ற சடங்கு!

உ.பி. ஆக்ராவில் ரேசன்கார்டு ஏற்பாடு செய்து தருவதாக கூறி 200 ஏழை முஸ்லிம்களை இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்யும் செய்யும் நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்புகள் செய்தது வெளிச்சமாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில், சம்பவம் மாநில அளவிலானது என்பதால் உ.பி அரசு இதனை விசாரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஆக்ராவில் நடைபெற்றதாக கூறப்படும் கூட்டு மதமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, இந்துவாக மதம் மாறி ராஜ்குமார் என்ற பெயரை சூட்டியதாக சங்பரிவார் அமைப்புகளால் பரப்புரைச் செய்யப்படும் இஸ்மாயீல் சித்தீகி இதுகுறித்து கூறும்போது; ‘ரேசன் கார்டுகளை ஏற்பாடுச் செய்து தருவதாக கூறி அவர்கள் எங்களை அழைத்துச் சென்றனர். மதம் மாற்றத்திற்கான சடங்கு என்பது தெரியாது. எங்களை இந்து மதத்தில் சேர்த்ததாக பின்னர் தாம் அறிந்தோம். ஆனால், நாங்கள் மதம் மாறவில்லை. இப்போதும் நாங்கள் முஸ்லிம்கள்தாம். முஸ்லிம்களாகவே தொடர்வோம்’ என்றார்.
சங்பரிவார அமைப்புகளான இந்து தர்ம ஜாக்ரன் மஞ்ச் மற்றும் பஜ்ரங்தளின் தலைமையில் 200 முஸ்லிம்கள் இந்து மதத்திற்கு திரும்பியதாக ஆர்.எஸ்.எஸ் பரப்புரைச் செய்து வருகிறது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள பட்டியலில் உட்படுத்தி ரேசன் கார்டும் இதர ஆவணங்களையும் ஏற்பாடுச் செய்து தருகிறோம் என்று வாக்குறுதி அளித்து இரண்டு ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் சடங்கிற்கு அழைத்துச் சென்றதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற நூர் முஹம்மது மற்றும் அவரது அண்டை வீட்டுக்காரர் ஜஹாங்கீர் ஆகியோர் தெரிவித்தனர்.
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் காளி சிலையை நிறுவி கோயில் கட்ட அனுமதி வழங்கிதை மதம் மாறியதாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கூறுகிறார்கள் என்று மதம் மாற்ற சடங்கில் பங்கேற்காத முனீரா என்ற இளம்பெண் தெரிவிக்கிறார்.
பீகார், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து குடியேறி ஆக்ராவின் வேத் நகரில் சேரிப் பகுதியில் வாழும் முஸ்லிம்களைத்தான் மேற்க்கண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் ஏமாற்றி மதம் மாற்ற சடங்கில் பங்கேற்க வைத்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம்கள் தாங்களாகவே தங்கள் விருப்பப்படி இந்து மதம் மாறினார்கள் என்று பரப்புரை செய்வது பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக