பராமரிப்பு இல்லாமல் பாலடைந்து வரும் நமதூர் கட்டண கழிவரை.
கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக கட்டப்பட்டது. நமதூர்
கட்டண கழிவரை முழுமையாக
ஒரு மாத காலம் கூட பராமரிப்பு செய்யாமல் இதுவரை கேற்பாடு அற்று காணப்படுகிறது என்று
சொன்னால் அது மிகையல்ல.
அப்படி என்றால் இதன் செலவினங்களை ஏற்ற பொது மக்களின் வரிப்பணம்
ஏஏவ்வ்.
சரி விசயத்திற்கு வருவோம். பல காலங்களாக பராமரிப்பில்லாமல்
காணப்பட்ட கழிவரையை ஒரு சில சமூக விரோதிகள் பொது சொத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்
பூட்டிக்கிடக்கும் கழிவரையில் மிண் விளக்கை எரியவிட்டு சென்று விடுவது வளக்கமாகி விட்டது.
இது ஒருபுறம் இருக்க இதை கண்டும் காணாமல் நமதூர் மக்களின் நம்பிக்கை பெற்ற பேரூராட்சி
தலைவர் இருப்பது தான் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆள்படுத்துகிறது.
இந்த தருவாயில் அந்த வழியாக சென்ற நமது அத்தா “ யாருமே இல்லாத
கக்கூஸில் யாருக்குடா விளக்க போட்டு வைச்சுரிக்கீங்க ” என்று கூறியதை கேட்ட நமது நிருபர்
உடனடியாக அந்த மின் விளக்கை அனைக்க முயற்சித்தும் பயனளிக்காமல் மண வேதனையுடன் வீடு
திரும்பினார் ( ஏனென்றால் ஈமானின் கடைசி நிலை அது தானே )
நமதூர் பேரூராட்சி இதனை கவணத்தில் கொண்டு பொது சொத்தை வீண்
விரையம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு நமதூர் மஹல்லா சார்பில் கேரிக்கை வைக்கிறது
நமது இனையதளம்.
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக