‘யாதும்’ ஆவணப் படம் திரையீட்டு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் இன்று பெரம்பலூரில் ‘யாதும்’ என்ற ஆவணப் பட திரையீட்டு நிகழ்ச்சி மிகுந்த
எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்வில் இடதுசாரி இயக்க சகோதரர்கள், திராவிட இயக்க சகோதரர்கள், தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், தலித் இயக்க சகோதரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆவணப் படத்தில் தமிழக முஸ்லிம்களின் தோற்றம், வரலாறு, வாழ்வியல், கலாச்சாரம் ஆகியன குறித்து காட்சிகளும், கருத்துகளும் தொகுக்கப்பட்டிருந்தன.
இதில் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடைமுறை நிகழ்வுகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபல வரலாற்று ஆர்வலர் கோம்பை அன்வர் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட முன்முயற்சியில் எடுத்த இந்த ஆவணப் படம் மதச்சார்பற்ற களங்களிலும், சமூக நீதி களங்களிலும் தமிழக முஸ்லிம்கள் குறித்த ஆழமான புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இது ஒரு அரிய முயற்சி என்ற வகையில் திரையீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அனைவரும் அவரை ஊக்கப்படுத்தும் வகையில் வாழ்த்திப் பேசினர். ம.ம.க. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி நிறைவுரையாற்றி அவருக்கு சால்வை அணிவித்து, கேடயம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
சகோதரர் அரும்பாவூர் தாஹிர் பாஷா நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். இதில் பார்வையாளர்களாக முஸ்லிம்களோடு சம அளவில் சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு தொடர்ந்து விருதுகளையும் குவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் பன்னாட்டு அளவிலும் இப்படம் கொண்டு செல்லப்பட இருக்கிறது.
ஆவணப் படம் குறித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய
எஸ். அன்வர் 9444077171
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக