பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று போராட்டம் நடத்த முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடிஐகோர்ட்டில், இந்து முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் கே.கோபிநாத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், Ô23 ஆண்டுகளுக்கு முன்பு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இப்போது அவற்றை மறந்து, அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6&ந்தேதி மசூதி இடிக்கப்பட்டது குறித்து வாசகங்களுடன் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தி வருகிறது.
இதனால், மக்கள் மத்தியில் மத வேற்றுமை ஏற்படுகிறது. எனவே, வருகிற டிசம்பர் 6&ந்தேதி இந்த அமைப்புக்கு கூட்டம் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்Õ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதனை தொடர்ந்து அவர் பிறபித்த உத்தரவு பின்வருமாறு:&
Ôஅரசியல் அமைப்பு சட்டத்தின் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டு வருகிறது. அந்த உரிமைகளின் அடிப்படையில் தான் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் கூட இதே உயர் நீதிமன்றத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு இந்து முன்னணி அமைப்புக்கு சார்பில் அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசாருக்கு இந்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இப்படி இருக்கும்பட்சத்தில், முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்Õ என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக