Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 31 டிசம்பர், 2014

சினிமா ! vs இசுலாமியர்கள்

இவ்வுலகின் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும் அறிவாயுதத்தின் வலிமை மற்ற எந்த ஆயுதங்களுக்கு கிடையாது. அந்த அறிவாயுத்தத்தின் முக்கிய கருவி ஊடகம் . ஊடகம் என்றால் சினிமா, செய்திதாள்கள், வானொலி , செய்தி தொலைகாட்சி வரிசைகள்,பத்திரிக்கை ஆகியவை தான் இதில் அதிகம் பிரப்பலமானது சினிமா மட்டும் தான் ஒரு சினிமா ஏற்படுத்தும் தாக்கத்தை விட வேறு எந்த ஊடகத்தாலும் ஏற்படுத்த முடியாது. எந்த ஒரு சமூகம் அல்லது இனம் அல்லது குழுக்களாக இருந்தாலும் அவர்களுக்கு என்று
தனி ஊடகத்தையோ பத்திரிக்கையோ வைத்து இருப்பார்கள். அவர்களுடைய கொள்கையையும் பிரச்சாரத்தை வெளிப்படுத்தும் கருவியாக இதனை பயன்ப்படுத்தப்படும்.

மக்களுக்கு நல்ல கருத்தையும் விழிப்புனர்வையும் ஏற்படுத்த வேண்டிய சினிமா தற்பொழுது வனிக ரீதியில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கலாச்சார சீறழிவுகளுக்கும், மத நல்லிணக்கத்தை மாய்க்கும் போக்கும், சினிமா ரசிகர்களை வெறும் தங்களுடைய பொருட்களை வாங்கும் வாடிக்கையாளராக சித்தறிக்கும் நிலை தான் நிகழ்வில் உள்ளது. சமூக அக்கறை கொண்ட படமும், விழிப்புணர்வை மையமாக கொண்ட படமும் திறைக்கு வருவது குறைவு அப்படி வந்தாலும் பெரிய நட்சத்திரம் நடித்த படம்க்கள் இதனை பின்னுக்கு தள்ளிவிடுகிறது. இளைய சமூதயத்தை பள்ளி படிக்கும் போது காதல் எப்படி செய்வது, கல்யாணத்திற்கு பிறகு கல்ல தொடர்பில் எப்படி ஈடுபடுவது, எப்படி கொலை கொள்ளை செய்வது என்ற அனைத்து செயல்களை கற்க ஒரு சினிமா பார்த்தால் போதும். இது ஒருபக்கம் இருந்தால் சினிமா ஒரு மதத்தின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது போல் தெரிகிறது.
1992 பிறகு தமிழ் சினிமாவில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக படங்கள் வரத்தொடங்கின.மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. பின்னர் 1995 அதே மணிரத்தினம் பம்பாய் திரைப்படத்தில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் காட்டினார்.
“பம்பாய் போலீஸ் சிவசேனாவின் அடியாள் படையாகச் செயல்பட்டது” எனக் குற்றம் சாட்டினார் வழக்கறிஞர் பல்கிவாலா. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் 80 சதவிகிதம் பேர் முஸ்லிம்கள்.
ஆனால் மணிரத்னம் காட்டும் கலவரக் காட்சிகளில் முஸ்லிம்கள் போலீசைத் தாக்குகின்றார்கள். ஒரு வண்டிக்குத் தீ வைத்து போலீசின் மேல் தள்ளி விடுகின்றார்கள். உண்மையில் இவ்வாறு நடைபெற்றிருக்கக் கூடிய ஒன்றிரண்டு சம்பவங்கள் கூட நரவேட்டையாடிய போலீசிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முஸ்லிம்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தான்.
ரோஜா படத்தில் மணிரத்னம் தொடங்கிவைத்த சினிமா வன்முறை பலராலும் பின்பற்றப்பட்டு விஜயகாந்த், அர்ஜுன் போன்ற தேசபக்தி (?) நடிகர்களால் மென்மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.நரசிம்மா என்ற படத்தில் விஜயகாந்த், ‘இந்தியாவில் முஸ்லிம், கிரிக்கெட் கேப்டனாக (அசாருதீன்), மாநில ஆளுநராக (பாத்திமா பீவி) வரமுடியும்; பாகிஸ்தானில் ஒரு இந்து வார்டு கவுன்சிலராகக் கூட வரமுடியாது” என்று தேசபக்தி வசனம் பேசுவார்.
ஜக்குபாய் என்ற ரஜினி படத்தின் விளம்பரம் முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது போல இருந்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது.
பின்னர் கமலின் உன்னைப்போல் ஒருவன்,விஸ்வரூபம்  விஜயின் வேலாயுதம்,துப்பாக்கி போன்ற படங்கள்  பயணம் என்ற திரைப்படம் சிம்புவின் வானம் சமீபத்தில் வெளிவந்த ஆள் திரைப்படம் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்படி முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை முஸ்லிம்களுக்கு எதிராக திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளார்கள்.
பின்னர் இந்த திறைப்படத்தின் தாக்கத்தால் படிப்படியாக பிற சமுதாயத்தினர் இஸ்லாமிய சமுதாயத்தின் மீது பகை மற்றும் பழி உணர்வுடன் பார்க்கவும், முஸ்லிம்களை அந்நியப்படுத்தவும் இந்தத் திரைப்படங்கள் ஒரு காரணமாக அமையும். இதற்கு முனுதாரணம் சமீபத்திய நிகழ்ச்சியில் ஒரு பிற சமூக இளைஞன் கூறியதாவது என் தாய் முஸ்லீம் இளைஞரோடு பழகக்கூடாது என்று சொல்லிதான் என்னை கல்லூரிக்கு அனுப்பினார்.என்றான்.இப்படி பல நிகழ்வுகள் சொல்லப்படாமல் இருக்கிறது. மறைமுகமாக இந்த சினிமா இவர்களை மூளைச்சலவை செய்கின்றது. இப்படி முஸ்லிம்களை பாதிப்புள்ளாக்கும் சினிமாவ ஏஎன் முஸ்லிம்கள் கையிலெடுத்து பொய்பிரச்சாரத்திற்கு எதிராகவும் உண்மையை உரக்க சொல்ல பயன்படுத்த கூடாது. சினிமா கூடுமா கூடாத என்று விவாதம் செய்ய நமக்கு நேரமில்லை. உலகில் நாம் தமிழகத்தில் மட்டும் தான் இந்த குழப்பமும் விவாதமும். இந்த சினிமாவை பயன்ப்படுத்தி பல சாதனைகளை சில இஸ்லாமியர்கள் தங்களுக்கு உரித்தாக்கினர்.
பாலைவன் சிங்கம் உமர் முக்தாரின் வரலாற்றை பற்றிய திரைப்படம், குஜராத்தில் நடந்த கொடுரங்களை பற்றிய “ஃபர்ஜானியா” மற்றும் “ஃப்ராக்”. கலிபா உமர்(ரலி) பற்றிய தொடர் , பாலஸ்தீன போராட்டங்களை மைய்யப்படுத்திய வேலியா ஆஃப் பாலஸ்தீன் என்ற திரைப்படமும் ,நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “Message” படமாக எடுத்து ஓர் புரட்சியை செய்தனர். இதன் விளைவாக பலர் இசுலாத்தை ஏற்க சூழ்நிலையை ஏற்படுத்தியது இயக்குனர் உட்பட.

இதனை சரியாக நம் மாற்றுமத சகோதரர்கள் பயன்படுத்துகின்றனர் எ-கா மஹாபாரதம்,இராமாயணாம், பல கடவுள்களின்பெயரில் படத்தை எடுத்துள்ளனர் அதில் பல பக்தி படங்கள் இன்று நம் இசுலாமியர்காளிடம் மனதில் பதிந்திகிடக்கின்றது.
இசுலாமிய வரலாற்றை பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், புனித மார்க்கமான இசுலாத்தின் பால் அழைப்பு கொடுக்கவும் அமேரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் நாஷ செயல்களை பொதுதளத்தில் எடுத்துரைக்கவும், இசுலாமிய போராளிகளின் வரலாற்றை கூறவும்,இசுலாமியர்களின் இந்திய சுதந்திர போராட்ட தியாகங்களையும் தீவிரவாத முத்திரையை அகற்றவும் இசுலாத்தின் மீதும் இசுலாமியர் மீதும் உள்ள பொய் பிரச்சாரத்திற்கு எதிராக உண்மை செய்திகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பரப்புரை யுத்தம் செய்ய இந்த சினிமா நமக்கு நல்ல ஆயுதமாக இருக்கும். இதை விளங்கி செயல்படுவது தான் நம்முடைய பணி.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக