பகைமையை உண்டாக்கும் (அறிவிப்பு) பலகை
கடந்த சில காலங்களுக்கு முன் கிழக்கு சுன்னத்துவல் ஜமாத்
பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த அநாகரிகமான அறிவிப்பு பலகையை போல், உங்களுக்கு நாங்கள்
எந்த விதத்திலும் சலைத்தவர்கள் அல்ல! என்று நிருபிக்கும் வகையில் அதே பானியை கையாண்டு
(அவர்களை மிஞ்சும் வகையில்)
தங்களை தாங்களே தரம் தாழ்த்தி கொண்டார்கள் நமது மேற்கு
நிர்வாகம் என்பதை இந்த அறிவிப்பு பலகை நடுநிலையாளர்களுக்கு பறைசாற்றுகிறது.
இந்த அறிவிப்பு பலகை சுன்னத்துவல் ஜமாத்தை சுத்திகரிக்குமா?
கருத்து வேறுபாடுகள் கிழக்கு மற்றும் மேற்கு என இரு நிருவாகத்திற்கும்
எள்ளலவும் ஒத்துவராது என்ற மாயை காட்டிய இவர்கள், இப்படிப்பட்ட விசயத்திற்கு இவர்கள்
இருவரும் பாசப்பிணைப்பில் பங்காளி மக்களாக காட்டுவதை தீன் இயக்கத்திற்கே முகம் சுழிக்கும்
வகையில் ஆகிவிட்டது.
இந்த அறிவிப்பு ஒரு சாராருக்கு எதிராக கட்டவிழ்கப்பட்டதினால்
இறைவின் பொருத்தம் நிருவாகத்திற்கு கிடைக்குமா என்பதை சற்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
எந்த ஒரு பிரச்சணைக்கும் சுமூகமாக தீர்வு காணும் சுன்னத்துவல் ஜமாத் இந்த விசயத்திற்கு
அன்று மன்டபம் கட்ட தன்னிச்சையாக எடுத்த முடிவுபோல் ஆகிவிடுமோ என்று நமதூர் மற்றும்
அமீரகத்தில் பரவலாக மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
நமது கோரிக்கை:
1. எல்லா
விசயத்திற்கும் இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு காணும் நாம் இந்த விசயத்தில் சரியான
முறையில் இருவர் மத்தியில் அழகிய ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்ள முன்வரவேண்டும்.
2. ஒப்பந்ததிற்கு
தீர்வு கிடைக்காமல் பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் சில சமூகவிரோதிகள் (இயக்க வெறி
கொண்டு) நடந்துக்கொண்டால் கால அவகாசம் அடிப்படையில் தனியாக அடக்கஸ்தலம் அமைத்துக்கொள்ள
கெடு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்
(குறிப்பு இதை கருத்தில் கொள்ளா விட்டால் காலம் முழுவதும்
இருவர்கள் மத்தியில் விரிசல்கள் அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியமலா இல்லை?)
3. ஒரு
முஸ்லிமின் மானம் மரியாதை கண்ணியத்தை பாதுகாப்பதே இன்னொரு முஸ்லிமின் கடமை, இதை உணராமல்
அடக்கஸ்தலத்தின் அருகில் (மையத்தை அடக்கம் செய்த பிறகு) ஒருவரை ஒருவர் தரம் தாழ்தி
கொண்டு பிரச்சணை ஏற்படுத்தும் நோக்கில் பேசாதீர்கள். நீங்கள் பேச பல இடங்கள் உள்ளது.
4. பிரச்சணைகளை
தூண்டாமல் அவர்கள் மத்தியில் நல்லுரவை ஏற்படுத்துவது இமாம்களின் தலையான கடமை! என்பதை
மறந்து விடக்கூடாது. அப்படி இருந்து விட்டால்? பேன் இருக்கிறது என்பதற்காக எறியும் கொள்ளியை
கொண்டு மண்டையை சொரிந்துக்கொள்வதற்கு சமம்.
நமது ஆலோசனை குழு மற்றும் நமது நிருபர்.
மேற்கு,மற்றும் கிழக்கு நிர்வாகிகளுக்கு எவ்வளவு அடித்தாலும் புத்தி வர மாட்டேங்குது, ஏன் என்றால் இதன் மூலம் பாதிக்கபடுவது இவர்கள் தான்... (தவ்ஹீத் ஜமாத்துக்கு இல்ல).மறுமையில் அல்லாஹ்விடம் இவர்களும் மற்றும் வேடிக்கை பார்த்து கொண்டு தீமையை தடுக்காமல்இருக்கும் இமாம் மற்றும் ஜமாத்தார்கள் எப்படி அல்லாஹ்விடம் பதில் சொல்ல போறார்கள் என்று தெரிய வில்லை..
பதிலளிநீக்கு