சிட்டாபூர்: உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற ஹிந்துத்துவ ஃபாஸிஸ்ட் நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் துவங்கி விட்டதாக கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோட்சே நாட்டின் தேசியவாதி
கடந்த 1948ல் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதியான இவர் இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜ. எம்.பி. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாராளுமன்றத்தில் கடும் அமளி எழும்பியது. இதனையடுத்து தனது பேச்சை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால் அது வெறும் கண் துடைப்பே என்பது இப்பொழுது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கோட்சேவுக்கு கோயில்
இந்நிலையில் உ.பி. மாநிலம் சிட்டாபூரில் ஆர்எஸ்எஸ்ஸின் தாய்க் கழகமான, பயங்கரவாதிகளின் ஊற்றுக்கண்ணான இந்து மகாசபை தீவிரவாதிகள் ஹிந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவுக்குக் கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கென பலரிடம் நிதி வசூலித்து தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளதாக இந்த பயங்கரவாத அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
புனே கோர்ட்டில் நாளை விசாரணை
இதற்கிடையில் கோட்சே தொடர்பான ஜனவரி 30ல் ஒரு திரைப்படம் தயாரித்து வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனே நீதிமன்றத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Thanks : Thoothuonline
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக