Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 11 நவம்பர், 2015

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா – அரசு சார்பில் கோலாகல கொண்டாட்டம்


பெங்களூரு: மாநில அரசு சார்பில் முதன் முறையாக நவ.10-ஆம் தேதி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

1782 டிச.29-ஆம் தேதி முதல் 1799 மே 4-ஆம் தேதி வரை மைசூரு ராஜ்ஜியத்தை ஆண்டவர் திப்பு சுல்தான். மைசூரு புலி என்று போற்றப்படும் திப்பு சுல்தான், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 4 போர்களை நடத்தியுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்திய திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் நடத்திய நான்காம் மைசூரு போரில் சாதாரண படை வீரனை போல சண்டையிட்டு மாண்டு போனார். இதையடுத்து அனைத்து மக்களின் கோரிக்கையை ஏற்று திப்பு சுல்தான் பிறந்த நாளை நிகழாண்டு முதல் கொண்டாட மாநில அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, பெங்களூரு, விதான செளதாவில் நவ.10-ஆம் தேதி காலை 11 மணிக்கு திப்பு சுல்தான் பிறந்தநாள் நடக்கவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்த்குமார், சதானந்த கெளடா, மத்திய இணையமைச்சர் ஜி.எம்.சித்தேஸ்வர், மாநில அமைச்சர்கள் ரோஷன் பெய்க், கமருல் இஸ்லாம், மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இந்த விழாவில், சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பெற ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடக்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சிறுபான்மையினர் நலத் துறை செய்துவருகிறது.
இந்நிலையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
குடகு மாவட்டத்தில் ஊர்வலம் சென்ற பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இது தொடர்பாக குடகுவில் நடந்த கல்வீச்சு மோதலில் வி.எச்.பி., பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக