இந்த முகமூடிகள் அவிழ்ந்து விழுந்த தருணம் அற்புதமானது, ஒரு மகா நடிகரையும் மற்றுமொரு மகா கலைஞரையும் பற்றி தெரிந்து கொல்லுங்கள். இருவரின் பெயரும் முஸ்லிம் பெயர்கள் போல்தான் இருக்கும்.
ஒருவர் தனது பிறந்த நாள் அன்று இவாறு பிரகடனம் செய்தார், ‘நான் ஒரு தேசப்பற்றுள்ள இந்தியன். இங்கே நடக்கும் பிரச்சினைகள் என்னைக் கவலைகொள்ள வைக்கின்றன.
இதற்காகவெல்லாம் நான் இந்தியாவை விட்டுக் கண்டிப்பாகப் போய்விடமாட்டேன். இந்த நாட்டில் வாழும் உரிமை பெற்ற தேசப்பற்றாளன் நான் என்று கட்டாயம் நினைக்கிறேன். மதரீதியான சகிப்புத்தன்மை இந்தியாவில் மிகமிகக் குறைவாக இருப்பது வருத்தப்படவைக்கிறது.. என் விருதுகளைத் திருப்பித்தர நான் தயார். இதற்காகப் போராடுபவர்களை நான் வரவேற்கிறேன்.ஆதரிக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
இன்னொரு நடிகர், தன் படம் வரவில்லை என்றதும் நாட்டை விட்டே போய்விடுகிறேன் என்று புலம்பியவர். இப்பொழுது விருகளை திருப்பிக்கொடுத்த எழுத்தாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இலவச அறிவுரைகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘விருதையெல்லாம் திருப்பித்தர இயலாது. இங்கு சகிப்புத்தன்மை இல்லையென்பது இன்று இல்லை பாகிஸ்தான் பிரிந்த போதே தெரிந்திருக்க வேண்டாமா? உங்களுடைய எதிர்ப்பை கட்டுரை எழுதிக் காட்டுங்கள், அத படித்து அனைவரும் திருந்திக்கொள்ளட்டும் மற்றும் வேறு பல வழிகள் உள்ளனவே’ என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
இந்த இரண்டு நடிகர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் புரிந்தாலே, ஏராளமான விஷயங்கள் தெரிந்துவிடும். விருதைத் திருப்பிக்கொடுத்தே ஆகவேண்டும் என்றெல்லாம் இங்கு யாரும் சொல்லவில்லை. அதுவும் சினிமாக்காரர்களிடம், அதுவும் தமிழ் சினிமாக்காரர்களிடம். ஆனால் யாராவது கேட்காவிட்டால் என்ன மிஸ்டர் காமன் மேன் வாண்டடாகவே கருத்துச் சொன்னார் , ஆனால் என்ன இந்த புனித பிரகடகனத்தை செய்யும் முன் தன்னுடைய பங்காளி மணிரத்னம் போலவே கொஞ்ச நேரம் பால்தாக்கரேயின் வாரிசிடம் போய் அமர்ந்து அனுமதி வாங்கிவிட்டுத்தான் வந்தார்.
இப்பொழுது மூடர் கூடத்திற்கு நல்லதொரு வாய்ப்பு ஷாருக் கான் தேச விரோதியாக மாறிவிட்டார், அவரை பாகிஸ்தானுக்கு விசா எடுத்து அனுப்ப தயாராகிவிட்டது மூடர் கூடத்தின் சாமியார்கள் பிரிவு, கமலஹாசன் தேசபக்தராக மாறிவிடுவார், அந்த மாட்டுக்கறி தின்ற விஸ்வரூபம் மாமியெல்லாம் இப்பொழுது கமலுக்கு விருது வழங்குவார்கள்.
மிஸ்டர் கமலஹாசன் உங்களுடைய அடுத்த படத்திற்கு பிரச்சனை வந்தால் நீங்கள் நாட்டை விட்டு போக வேண்டாம் ஏதாவது சகிப்புத்தன்மை குறித்து பேசிப்பாருங்கள் அவர்களே அனுப்பி வைப்பார்கள்.
“மறதி ஒரு தேசிய வியாதி” – உன்னைப்போல் ஒருவன்
- சஹீத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக