இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டி அமீரகத்தில் பல்வேறு நலப்பணிகளை செய்து வருகின்றது.அதில் ஓர் அங்கமாக இந்தியாவின் அரசியல் சூழல் குறித்தும், தமிழகத்தின் நிலை குறித்தும் இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.
தாயகத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதற்காக
வருகை தந்த SDPI கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் முஹம்மது தெஹ்லான் பாக்கவி அவர்களை வைத்து ஷார்ஜா, துபை, அபூதாபி ஆகிய மூன்று பகுதிகளிலும் முறையே கடந்த நவம்பர் 6, 13, 14 ஆகிய தேதிகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கு பெற்ற அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
அய்மான் சங்கத்தின் தலைவர் ஷாஹுல் ஹமீது, இந்தியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் தேசிய பொதுச் செயலாளர் நஸீர் நந்தாவர் (கர்நாடகம்), தேசிய துணைத் தலைவர் ஹஸன் நாதாபுரம்(கேரளா) ஆகியோர் இக்கருத்தரங்குகளில் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இக்கருத்தரங்குகளில் சிறப்புரையாற்றிய SDPI மாநிலத் தலைவர் முஹம்மது தெஹ்லான் பாகவி அவர்கள் தனது சீரிய கருத்தாலும், புள்ளிவிவர விளக்கத்தாலும் நாட்டின் சூழலை படம் பிடித்துக் காட்டினார்.
ஷார்ஜாவில் “சிதைக்கப்படும் மதச்சார்பின்மை” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.இந்தியாவில் பாஜக ஆட்சியமைத்ததிலிருந்து இந்திய தேசம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவது குறித்தும், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களை பின்பற்றினாலும் ஒற்றுமையாக வாழும் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு வாழும் வன்ம சூழ்நிலையை இன்றைய மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது குறித்தும் அவர் தனது சிறப்புரையில் விரிவாக குறிப்பிட்டார். மேலும் அவர் கூறியதாவது:
தனிமனித சுதந்திரம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன உணவு உண்ண வேண்டும் என்பதனை தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஆனால் மாட்டுக்கறி உண்கிறான் என்கிற பெயரால் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மாடுகளை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வியாபாரிகள் அடித்து உதைக்கப்படுகிறார்கள். தலித்துகள் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள். அன்பாய், சகோதரத்துவமாய்,இணக்கமாய் வாழும் சூழலை இந்த வகுப்புவாத சக்திகள் இன்று இந்தியாவில் அழிக்க துவங்கி விட்டன.
மதச்சார்பின்மையை விரும்பும் நடுநிலையாளர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். எழுத்தாளர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். அறிஞர்கள், விஞ்ஞானிகள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோர் இன்று இந்திய நாட்டின் நிலை குறித்து அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்த அவலங்களை துடைத்திட SDPI கட்சி நாடு முழுவதும் களமாடிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு ஷார்ஜாவில் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
துபையில் “இந்திய அரசியல் சூழ்நிலையும் நமது பொறுப்பும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தாத்ரி சம்பவத்தை சுட்டிக்காட்டி அந்த நிகழ்விற்கு பிறகு அஃக்லாக் என்ற முஸ்லிமுக்கு நடந்த அநீதியைக் கண்டு இந்த தேசத்தின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இராணுவ வீரர்கள் என அனைவரும் எதிர்ப்பை காட்டினார்கள். பீகார் தேர்தலில் பீஜேபி-க்கு பீகார் மக்கள் நல்லதொரு பாடத்தை கொடுத்து அவர்களின் கொள்கைக்கு சாவு மணி அடித்தார்கள்.
ஒருவேளை அந்த தேர்தலில் பீஜேபி வெற்றி பெற்றிருந்தால் அஃக்லாக் கொலையை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று எண்ணி நாடு முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருப்பார்கள். அதற்கு பீகார் மக்கள் இடம் தரவில்லை. இந்த தேர்தலில் பாடம் கற்றுக் கொண்டாலும் அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் அடங்க மாட்டார்கள்.
முஸ்லிம்களுக்கான பிரச்னை என்பது தேசிய அளவிலானது. அது இடஒதுக்கீடாக இருந்தாலும், பாபரி மஸ்ஜிதாக இருந்தாலும், சச்சார் கமிட்டி அறிக்கையாக இருந்தாலும், ஃபாசிஸ அச்சுறுத்தலாக இருந்தாலும் இந்திய அளவில்தான் பிரச்னை வலுக்கிறதே தவிர தமிழகம் தழுவிய அளவில் போராடி பயனில்லை. ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து தேசிய அளவில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தால்தான் இந்த நிலை மாறும்.
தமிழகத்தின் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், கட்சிகளும், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட தலித் இயக்கங்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் ஓரணியில் நின்று வரவிருக்கும் 2016 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க முன்வருமேயானால் அவர்களோடு இணைந்து தேர்தல் களம் காண SDPI-க்கு எத்தகைய தயக்கமும் இல்லை.
SDPI கட்சி ஒன்றும் பத்தோடு பதினொன்றாக ஆரம்பிக்கப்படவில்லை. SDPI கட்சி துவங்கும் முன் இந்தியாவில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும், ஹைதராபாத்தில் அஸதுத்தீன் உவைசி முதற்கொண்டு சமுதாய நலனுக்காக தேசிய அளவில் ஒன்றிணைய வாருங்கள் என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. சமுதாய நலனை விரும்பிய நலம் விரும்பிகளை மட்டும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் துவங்கப்பட்டதுதான் SDPI.
இவ்வாறு துபையில் ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.

அபூதாபியில் “இந்தியாவின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் சிறப்புரையாற்றிய பொழுது அவர் கூறியதாவது: சுதந்திரப் போராட்டத்தில் இந்திய நாட்டை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களை விரட்டியடிக்க வீரப் போர் புரிந்த தலைவர்கள் சிராஜ் உத் தவ்லா, ஹைதர் அலீ, திப்பு சுல்தான் போன்றோரை நினைவு கூர்வது இந்த நேரத்தில் மிகவும் உகந்தது. அந்த போராட்டத்தில் இந்து, முஸ்லிம் என்ற பாகுபாடு இல்லாமல் எதிரியை வீழ்த்த தோளோடு தோள் நின்று போரிட்ட வீரமும், ஒற்றுமையும் நமக்கு உண்டு.
அதே அடிப்படையில் மீண்டும் இந்தியாவை வகுப்புவாதம், இனவாதத்தால் பிளவுபடுத்தி,கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நாட்டை அடகு வைக்க துடிக்கும் அநீதியான ஆட்சியாளர்களிடம் இருந்தும், ஃபாசிச சங்கப்பரிவார கூட்டங்களிடமிருந்தும் நாட்டை பாதுகாக்க போராட ஒவ்வொரு இந்தியனும் முன்வரவேண்டும். நமது ஒற்றுமையில் விடியல் பிறக்கும். அந்த விடியலில் இந்தியாவின் எதிர்காலம் வெளிச்சம் காணும்.
இவ்வாறு அபூதாபியில் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக