Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 28 நவம்பர், 2015

நமதூரில் நடைபெற உள்ள குடும்பவியல் ஆய்வரங்கம் ..

லெப்பைகுடிக்காடு கிழக்கு மஹல்லா மற்றும் நகர ஜமாஅத்துல் உலமா இணைந்து நாளை (29/11/2015) ஞாயிற்றுக்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு கிழக்கு ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் மாபெரும் குடும்பவியல் ஆய்வரங்கம் நடைபெறுகிறது .
இனிய இல்லற வாழ்வில் இடையூறு அளிப்பது கணவனா?.. மனைவியா?.. உறவினர்களா?… என்ற தலைப்பில் உலமாக்கள் பங்கு பெரும் மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுகிறது …

இப்பட்டிமன்றத்திற்கு சென்னை அடையார் நூருல் ஹிதாயா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி .ஹபீழ்,அப்ஜலுல் உலமா Dr.M.சதீதுத்தீன் பாஜில் பாக்கவி அவர்கள் நடுவராக பங்கேற்கிறார்..
பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது ..

பெண்களுக்கு தனி இடவசதியும் செய்யப்பட்டுள்ளது..
இந்நிகழ்ச்சி முழுவதையும் கல்லாறு இணையதளத்தில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.. காண தவறாதீர்கள்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக