லக்னோ : கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, சமீபத்திய பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் , மொத்தமுள்ள 58 இடங்களில் 50 இடங்களை இழந்து விட்டது. மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் லக்னோ தொகுதியில் 28 இடங்களில் 24 இடங்களை இழந்து விட்டது. மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா-வின் தியோரா தொகுதியில், 56 இடங்களில் 49 இழந்து மரண அடி வாங்கியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல் நடந்து வரும் சூழலில், உத்தரப் பிரதேச மக்கள் அளித்த வாக்குகள், பாஜக ஆட்சியின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக