Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 நவம்பர், 2015

மோடியின் ஏமாற்று வித்தை பீகாரில் பலிக்கவில்லை – பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா பகிரங்க தாக்குதல்

‘பிஹாரில் பிரதமர் மோடியின் பிரச்சாரம், நிதி அறிவிப்பு எல்லாம் தேர்தல் மாயாஜாலம் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டது’’ என்று அக்கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா சரமாரியாக குற்றம் சாட்டினார்.
பிஹார் மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாஜக எம்.பி. சத்ருகன்
சின்ஹா. பிஹாரில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஒதுக்கி வைக்கப்பட்டார். இத்தேர்தலில் பாஜக 53 இடங்களை மட்டுமே பெற்றது. அதற்கு பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடிதான் காரணம் என்று ஏற்கெனவே பகிரங்கமாக குற்றம் சாட்டினார் சத்ருகன். இந்நிலையில், மீண்டும் மோடி மீது அவர் சரமாரியாக குற்றம் சாட்டி உள்ளார்.
பிஹார் தேர்தலில் 53 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடியின் பிரச்சாரம்தான் காரணம். அதை மறுப்பதற்கு இல்லை. அதேசமயம், பிரச்சாரத்தில் லாலு மீது மோடி நடத்திய தாக்குதல்கள் எல்லாம் பாஜக.வை திருப்பி தாக்கி விட்டது. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பிஹார் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்று மோடி கூறியது வெறும் தேர்தல் மாயாஜாலம் என்பதை மக்கள் புரிந்து கெண்டனர்.
பிஹாரில் உண்மை நிலவரம் என்ன என்பதை மோடியிடம் பாஜக தலைவர்கள் மறைத்து விட்டனர். பிஹார் மாநிலத்தை சேராதவர்களுக்கு தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும், முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிரான அலை எதுவும் பிஹாரில் இல்லை. அத்துடன் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் நிதிஷ் குமார் கூட்டணி வைத்த போதே, தேர்தலில் பாதி வெற்றி அவர்களுக்கு கிடைத்து விட்டது. காட்டு தர்பார், காட்டு தர்பார் என்று மீண்டும் மீண்டும் லாலுவை தாக்கி மோடி பேசியது, பாஜக.வுக்கு எதிராகவே போய்விட்டது. தேர்தலில் லாலு கட்சி 80 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாகிவிட்டது.
பிஹாரில் யாதவர்கள், முஸ்லிம்கள், குர்மிஸ் இனத்தவர் கள், காங்கிரஸ் ஆதரவாளர்களின் ஓட்டுகள் மட்டுமே 40 சதவீதம். இதை பாஜக தேர்தல் பிரச்சார பொறுப்பில் இருந்தவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இவ்வாறு சத்ருகன் சின்ஹா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக