பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் வந்து விளையாட பிசிசிஐ தலைவர் ஷஷாங்க் மனோகர் விடுத்த அழைப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை.
“இந்தியாவில் விளையாடும் பேச்சுக்கே இடமில்லை” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஷஹார்யார் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
“ஏன் யுஏஇ-யில் ஆட முடியாது என்ற காரணத்துக்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது. இது எங்கள் தொடர் எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அல்லது யுஏஇ-யில் தான் விளையாடலாம்.
ஏற்கெனவே ஐபிஎல் தொடரை துபாயில் விளையாடியுள்ளனர், பிறகு யுஏஇ-யில் பாகிஸ்தானுடன் தொடரை விளையாடுவது என்ன பிரச்சினை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் ஷஹாரியார் கான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக