நடிகர் கமல்ஹாசன் தனது 61வது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார். இதனை ஒட்டி அவரது நற்பணி இயக்கத்தின் சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவிட்டு பேசும்போது
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாதீர்கள்.
எந்த காரணங்களுக்காக சாப்பிடாதீர்கள் என சொல்கிறீர்கள் என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆதலால் சாப்பிடாதீர்கள். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், என்னை விட பெரிய மிருகங்களை சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
சாப்பாடே இல்லாமல் நிறைய பேர் இந்தியாவில் இருக்கிறார்கள், அதை கவனியுங்கள். அதை விடுத்து இதை தான் சாப்பிட வேண்டும் என்று மெனு போடாதீர்கள். இன்றைய விஞ்ஞானிகள் மாடு, கன்றுகளை விடுத்து பூச்சிகளை சாப்பிடுவது நல்லது என்று சொல்கிறார்கள்.
இன்னும் ஒரு 30 வருடங்கள் கழித்து மாறும். அப்போதும் ஏதாவது ஒரு பூச்சி சாமியார் வந்து, அதெல்லாம் சாப்பிடக் கூடாது என்பார். அது நடந்து கொண்டே தான் இருக்கும்.
தேசப் பக்தியைத் தாண்டி உலகப் பக்தியை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம். பாஸ்போர்ட் எல்லாம் வேடந்தாங்கல் பறவைகள் போல் நாம் இழக்கும் காலம் வரத்தான் போகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூவிய தமிழன், இதை செய்துக் காட்ட வேண்டாமா. அதற்கான பாதைகள் நாம் சென்று கொண்டிருக்கிறோமா என்று ஆராயா துவங்கினாலா போதும் இந்த மாதியான அபத்தமான விவாதங்களில் நாம் ஈடுபட மாட்டோம். ஏன் இவ்வளவு கோபமாக பேசுகிறேன் என்றால் என்னுடைய நேர்மையைச் சந்தேகித்த அந்த கோபம் தான். எனக்கு அக்னிப்பரீட்சை எல்லாம் வைக்க முடியாது.” என்று தெரிவித்தார் கமல்ஹாசன்.
ஆனால் இந்த பேச்சிற்கு இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுகளை திருப்பி கொடுக்கும் விசயத்தில் அவரை வரவேற்கும் அதே வேலையில், கமல் தெய்வங்ககளை அவமதிக்கும் வகையில் பேசுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக