Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 நவம்பர், 2015

இந்தியாவின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்ற முடியாது : மத்திய அரசு மனு தாக்கல்

இந்தியாவுக்கு, ‘பாரத்’ என்ற பெயரை சூட்ட வேண்டும் எனக்கூறி, நிரஞ்ஜன் பட்வால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
இந்திய அரசு சட்டம் 1935-ஐ ரத்து செய்து இந்திய சுதந்திர சட்டம் 1947-ஐ அமல்படுத்தியதும், நமது நாட்டுக்கு ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ஆனால் இந்திய நாட்டுக்கு ‘பாரத்’, ‘இந்துஸ்தான்’, ‘இந்த்’ அல்லது ‘பரத்வருஷ்’ என்பது போன்ற சமஸ்கிருத பெயர்களை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்

எனவே தற்போது சூட்டப்பட்டு உள்ள ‘இந்தியா’ என்ற பெயருக்கு பதிலாக, மேற்குறிப்பிட்ட ஏதாவது ஒரு பெயரையே இந்திய நாட்டின் பெயராக பயன்படுத்த வேண்டும். அரசு மற்றும் ஆட்சி பணிகளுக்காக ‘இந்தியா’ என்ற பெயரை பயன்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் மட்டுமல்லாது, அரசு சாராத நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் இந்திய நாட்டுக்கு பெயரை மாற்றி உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கோரியிருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு, கடந்த ஏப்ரல் 25-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பொதுநல மனு குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அந்த மனுவில், ‘இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றுவதற்கான அவசியம் எதுவும் இல்லை. இதுபோன்ற கோரிக்கைகள் தேவையற்ற ஒன்று. எனவே இது தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக