Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 25 நவம்பர், 2015

சிட்டி ஆஃப் லைஃப் – திரைப்பட விமர்சனம் (யாசர் அரஃபாத்)

இந்தப் படத்தையெல்லாம் பார்க்க முடியுமா என்று நான் ஒதுக்கிவைத்த படத்திலொன்றுதான் CITY OF LIFE. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சரி இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கு பார்ப்போமே என்று பார்த்தேன், இந்தப்படத்தையா இவ்வளவு நாட்கள் பார்க்காமல் போனோம் என வருத்தப்பட வைக்கும் அளவிற்கு மிக அருமையானதொரு படமாக இருந்தது.
முக்கியமாக நான்கு கதாபாத்திரத்தங்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் படம். முழுக்க முழுக்க அமீரகத்தில் (UAE) எடுத்தப்படம்..
உள்ளூர் செல்வாக்கு, பணம் மிகுந்த அரபியைச் சுற்றியும், இந்தியா குஜராத்திலிருந்து வந்து டாக்ஸி ஓட்டும் ஒரு இளைஞர் துபாயில் எடுக்கும் பாலிவுட் படத்தில் வாய்ப்பு தேடி அலைபவரை சுற்றியும், இத்தாலி நாட்டிலிருந்து ஏர்வேஸில் பணிபுரியும் பெண்ணும், அவருடைய அமெரிக்க காதலனை சுற்றியும், பிலிப்பைன் நாட்டிலிருக்கும் ஒருவர் அட்டை குப்பைகளை எடைக்கு போடுபவரை சுற்றிதான் கதைகள்.

காட்சிகள் சலிப்பைத் தராத வகையில் இவர்களைப்பற்றிய திரைக்கதையை அழகாக நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.
உள்ளூர் அரபிகளின் கலாச்சாரமும், பணக்கார அரபிகளின் நாகரீக வாழ்க்கையும், ஒரு அருமையான நட்பையும், கண்டிப்பு மிகுந்த தகப்பனார் என எல்லோ கோணத்திலும் அருமையாக எடுத்து அமீரக வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து இருக்கிறார்கள்.
ஏழை பள்ளிப்பருவக்காலத்திலிருந்தே நட்பில் இருக்கும் ஃபைசல் மற்றும் கல்ஃபான் என்ற இருவரின் நட்பும், அரபிகளுக்குள் ஏற்றத் தாழ்வை பார்ப்பது மாதிரியான திரைக்காட்சியும், நட்பிற்காக நடக்கும் நிகழ்வுகளும் நம் நெஞ்சில் ஒரு இடம் பிடிக்கும் என்பது மட்டும் உண்மை.
டாக்ஸி ட்ரைவர், இந்தியாவில் மிக பிரபலமான ஒரு நடிகரைப் போன்றே அச்சு அசலாய் இருப்பதால் அவருக்கு ஏற்படும் நிகழ்வுகளையும், ஒரு நடிகரைப்போலவே இருப்பதால் கூடஇருக்கும் நபர்கள் இவரை ஒரு நடிகனாக மாற்ற செய்யும் தூண்டுதலான பாராட்டையும்;
எல்லோரின் தூண்டுதலான பேச்சினாலும், இன்னொரு டாப் ஸ்டார் போன்று இருப்பதால் அவருக்குள்ளே உண்டான ஆர்வ தூண்டுதலாலும், தான் நடிகனாக மாற வேண்டுமென்ற ஆசையையும், அதில் அவர் கண்டுக்கொள்ளும் அவமானங்களையும் அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.
மேற்குலக கலாச்சாரத்தில் இருப்பவர்கள் பற்றிய அவர்களுடைய நாகரீகத்தையும், அவர்களோடு உள்ளூர் பணக்கார அரபிகளின் இணைப்பும், மேற்குலக நாகரீகத்தால் ஏற்படும் இழப்புகளும், மேற்குலகுக்கு தேவையான அத்தனை ஆடம்பர வசதிகளும் துபாயில் இருப்பதற்கானக் காட்சியமைப்பும் அருமை.
சதா உழைத்துக்கொண்டே இருக்கும் ஒரு பிலிப்பைன் வயதான ஏழைக்கு என்ன நடக்கிறது இவர்கள் மூலமாக என்ன நிகழ்வை பெறுகிறார், என்பதான காட்சி அமைப்பும் அருமை.
கதைப்படி இவர்கள் ஒருவரை ஒருவர் தெரியாதவர்களாக இருக்கிறார்கள், ஆனாலும் இவர்களை எப்படி சந்தர்ப சூழ்நிலை சந்திக்க வைக்கிறது என்பதனான காட்சியமைப்பு அருமை.
இந்திய டாக்ஸி ட்ரைவருக்கு வேலை போய், ஒரு சந்தர்பத்தில் அதே டாக்ஸியில் ஆடிஷனுக்கு அதே காரில் செல்லும்போது , அந்த காரை ஓட்டும் ஒட்டுனர் காஷ்மீர் ட்ரைவருக்கும் இவருக்கும் நடக்கும் சிறு நிமிட காட்சிகளில் காஷ்மீரிகளின் மேல் கடுப்பு வரவைக்கும் அளவுக்கு தந்திரமான சொறுகலும்,
அதே டாக்ஸி ட்ரைவர் செலக்ட் ஆகுவதற்கு குஜராத் இனப்படுகொலையில் பாசிசவாதிகளின் வசனத்தையே பேச வைத்திருக்கும் சொறுகலும் கவனிக்கப்படவேண்டியவை.
படத்தின் சின்ன சின்ன காட்சிகள், நமக்கு இதில் முன் அனுபவம் இருக்கிறது என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை அழகாக வெளிக்கொணர்ந்து இருக்கிறது. படம் முழுமையாக பார்த்தப்பின் ஒரு ஈரானிய படத்தைப் பார்த்தது மாதிரியான ஒரு கனத்தை கொடுக்கிறது. சின்ன சின்ன நுணுக்கமான உணர்வுகளை ஆங்காங்கே நடிகர்களின் திறம்பட வெளிப்பாடுகளில் நிச்சயம் மனதை ஏதோ செய்கிறது.
EVERYTHINNG HAPPENS FOR A REASON என்ற ஒற்றைவரி படத்தைப் புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது. பார்க்கவேண்டிய தரமான படத்தில் ஒன்றுதான் CITY OF LIFE.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக