லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக “கொலைகாரனே வெளியேறு” என்ற பதாகைகளுடன் பல நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயனமாக இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், அந்நாட்டு அதிபர் டேவிட் காமரூனை சந்திக்கிறார், பின்னர் அவர் இங்கிலாந்து இளவரசியுடன் நடக்கும் பகல் விருந்திலும் கலந்து கொள்வார் என்று திட்டமிடப்படிருந்தது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெறிவித்து பல்வேறு அமைப்பினர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாலர்கள் லண்டன் “டவ்னிங்க் தெருவில்” கூடி பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூன்று வருடங்களுக்கு முன்பு வரை குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைகளுக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டு மோடி இங்கிலாந்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து நிர்மலா ராஜசிங்கம் என்ற போரட்டக்காரர் தெரிவிக்கையில் ” நாங்கள் நீண்ட காலமாக நரேந்திர மோடிக்கு எதிராக போராடி வருகிறோம், அவர் இன்னும் தன்னுடைய குஜராத் படுகொலை சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் மத சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், அவர் இந்தியாவை சிறுபான்மையினருக்கு எதிரான நாடாக உருவாக்கிவிட்டதாகவும் தெரிவித்தனர்.
மற்றொரு ஆர்ப்பாட்டக்காரரான “தமான் சிங் சித்து” தெரிவிக்கையில் ” மோடியின் ஆட்சியில் சீக்கியர்கள், முஸ்லிம்கள், கிருஸ்தவர்கள் என அனைத்து சிறுபான்மையினரும் அச்சுருத்தப்படுவதாக தெரிவித்தார்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக