ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்ட நேரிசலை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் மாதம் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை ரூ.5-லிருந்து ரூ.10-ஆக உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
எனினும்,சிறிய தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கான, குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவே இருந்தது. இதைப் பயன்படுத்தி, பெரும்பாலான பயணிகள் குறைந்தபட்ச கட்டண டிக்கெட்டை எடுத்து கொண்டு ரயில் நிலையத்தை உபயோகப்படுத்தி வந்தனர்.
இதனால், ரயில் நிலையங்களுக்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்ற ரயில்வேயின் எண்ணம் பலனலிக்காமல் போனது. இதைத்தொடர்ந்து சிறிய தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.10 என உயர்த்துவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில்களில் குறைந்தபட்ச கட்டணத்தை ஐந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாயாக உயர்த்துவது என இந்திய ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நவம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எனினும், இந்த கட்டண உயர்வு பெருநகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு பொருந்தாது. என ரயில்வே நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக