இரண்டு வரவேற்கத்தக்க செய்திகள்..
ஜெயா அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள மொத்துக்கள்...
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளின் கடமை அரசை விமர்சிப்பது. அதற்கு உரிய பதிலைச் சொல்லாமல் இப்படி வழககுப் போடுவதும் அந்த வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தால் மேல்முறையீடு செய்வதும் இதெல்லாம் என்ன எனக் கேட்டதோடு, எதற்காக இந்த வழக்குகளில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாதிட வருகிறீர்கள் என அரசு வழக்குரைஞர்களையும் நீதிபதிகள் சாடியுள்ளனர்.
பாடகர் கோவன் தொடர்பாகத் தமிழக அரசு தொடுத்துள்ள மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது மற்றொரு இனிய செய்தி.
ஒரு ஜனநாயகம் என்பது ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சியும் சேந்ததுதான். முக்கிய பிரச்சினைகள் அனைத்திலும் எதிர்க் கட்சிகளின் கருத்துக்கள் முக்கியமானவை. எதிர்கட்சித் தலைவர் ஒரு கேபினெட் அமைச்சர் நிலை வழங்கப்பட்டுள்ளவர்.
ஒரு ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் ஆட்சி மட்டுமல்ல. அது சிறுபான்மை தன் கருத்துக்களைப் பேசவும், சிறுபான்மை தன்னைப் பெரும்பான்மையாக ஆக்கிக் கொள்ளவும் வாய்ப்பளி்க்கவும் கூடிய ஒரு நிறுவனம்.
தனது அமைச்சர்களையே வெறும் 'சைபர்' களாகவும் கூழைக் கும்பிடுபோடும் கொலு பொம்மைகளாகவும் வைத்து கழைக்கூத்து நடத்தும் ஜெயலைதாவிற்கு ஜனநாயகத்தின் பொருள் எப்படி விளங்கும்?
எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு முறையாகப் பதில் சொல்வதை விட்டுவிட்டு இப்படி வழக்குப் போட்டு அரசு நிதியையும், நீதிமன்றத்தின் நேரத்தையும் வீணடிக்கும் ஜெயாவுக்கு இது ஒரு நல்ல சூடு.
நன்றி Marx Anthonisamy
முகநூல் பக்கத்திலிருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக