Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 நவம்பர், 2015

தொழுதூர்:அரங்கூர் ( ராஜா ) வாய்க்காலில் மினிலாரி கவிழ்ந்து கோரவிபத்து.

02-11-15 தொழுதூர் அருகே அரங்கூர் பாலத்தில் இருந்து வாய்க்காலில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
அரியலூர் மாவட்டம் முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவர் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருச்சி
மாவட்டம் வடக்கு தாராபுரத்தைச் சேர்ந்த அவருடைய நெருங்கிய உறவினர் வீராச்சாமி, சுரேஷ், மங்காகிருஷ்ணன் ஆகியோர் உள்பட 36 பேர் ஒரு லாரியில் முதுகுளத்துக்கு புறப்பட்டனர். லாரியை தாராபுரத்தைச் சேர்ந்த டிரைவர் மகாகிருஷ்ணன் என்ற மொட்டையன் (வயது 40) ஓட்டினார்.கடலூர் மாவட்டம் அருகே ராமநத்தம் அருகே அரங்கூர் பொதுப்பணித்துறை வாய்க்கால் பாலத்தில் சென்றபோது அந்த லாரி, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதனால் லாரியில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர். பின்னர் அந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் பாலத்தில் இருந்து தலைகுப்புற கால்வாயில் கவிழ்ந்தது.சுமார் 15 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால், அந்த லாரி நொறுங்கியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், லாரியில் வந்த ராமச்சந்திரன் என்பவருடைய மனைவி செல்வமணி (50), வெங்கடேசன் என்பவருடைய மகன் மலையப்பன்(30) ஆகிய இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.மேலும் கங்கையம்மாள்(55), மகேந்திரன்(18), அம்சவள்ளி(55),மாசிலாமணி(35), ஏகாம்பரம்(55) ஆகியோர் உள்பட 34 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 29 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அறிவழகன், மயிலானந்தம் என்ற மயில் உள்பட 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் கங்கையம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதற்கிடையே பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மயிலானந்தம், அறிவழகன் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் (தொழுதூர்) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்படத்தக்கது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக