மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு இயக்கம் தொடங்கப்படும் என்றும் அதற்காக விரைவில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்ப தாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித் துள்ளார்.
பிஹார் தேர்தலில் லாலு, நிதிஷ் கூட்டணி மொத்தம் உள்ள 243-ல் 178 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில், ஆர்ஜேடி 80 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உரு வெடுத்துள்ளது. இந்நிலையில், லாலு பிரசாத் யாதவ் நேற்று செய்தியாளர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பஜக-வையும் பிரதமர் மோடியையும் கடுமையாக சாடினார்.
நாடு முழுவதும் உள்ள மக்கள் பிரதமர் மோடி மீது கோபம் அடைந்துள்ளனர். பிஹார் தேர்தல் முடிவு இதை பிரதிபலிக்கிறது. இதன்மூலம் நாட்டு மக்கள் சிறிதளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
இனி நிதிஷ் குமார் பிஹார் மாநிலத்தை கவனித்துக் கொள்வார். மதவாத சக்திகளுக்கு எதிராக ஒரு இயக்கத்தை தொடங்குவது தொடர்பாக நான் விரைவில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இதன் முதல்கட்டமாக மோடியின் வாரணாசி தொகுதிக்குச் செல்வேன். அங்கு மக்களவைத் தேர்தலின் போது மோடி அளித்த வாக் குறுதிப்படி வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளதா என லாந்தர் விளக்கு (ஆர்ஜேடி சின்னம்) உதவியுடன் தேடுவேன்.
நாட்டில் யாருக்கும் பாது காப்பு இல்லாத சூழல் நிலவு கிறது. பாஜக அனைவரையும் தீவிரவாதிகளாக மாற்றி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் பிறக்கும் என்று சொன் னார்கள். ஆனால், இதுபோன்ற மோசமான நிலையை நாடு எப்போதும் பார்த்ததில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக