Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 18 நவம்பர், 2015

தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட புரட்சிப்பாடகர் கோவன் ஜாமீனில் விடுதலை!.

மதுவுக்கு எதிராக தனது பாடல்கள் மூலம் பிரச்சாரம் செய்த மக்கள் கலை இலக்கிய கலகத்தைச் சேர்ந்த புரட்சிகர பாடகர் கோவனை சென்னை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீஸார் அக்டோபர் 30-ம் தேதி அதிகாலை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
கோவனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை பெருநகர தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற
நீதிபதி எஸ்.கணேசன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கோவன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டதால், சென்னை கொரட்டூரில் உள்ள நீதிபதி சி.டி.செல்வம் வீட்டில் விசாரணை நடத்தப்பட்டது. கோவனை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை யடுத்து கோவன் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோவன் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆதிநாதன், கோவனுக்கு ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக