உறுதியான இறைநம்பிக்கை கொண்ட ஈரானின் ராணுவத்தை யாராலும் வெல்லமுடியாது: அஹ்மதி நிஜாத்
18 Apr 2012
தெஹ்ரான் ஈரானின் ராணுவம் இறை நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதால் அதனை யாராலும் வெல்லமுடியாது என்று ஈரான் அதிபர் நஜாத் தெஹ்ரானில் நடந்த தேசிய ராணுவ தினத்தில் உரையாற்றும் போது கூறினார்.
நேர்மையான ஆளுமை எல்லைகள் கொண்ட ஈரானை தற்காக்க எங்கள் ஆயுதம் ஏந்திய படை போரட்டத்திற்கு தயாராக இருக்கிறது என்று ஈரானின் அதிபர் தெரிவித்தார்.
மேலும் அரேபியா வளைகுடாவில் நிகழும் பாதுகாப்பு நிலையை தொடர்புபடுத்தி கூறும்பொழுது “பாதுகாப்பை நிலை நாட்ட அண்டை நாடுகளும் அதனுடைய அரசாங்கமும் ஒன்று சேர்ந்து பங்காற்றாமல் அயல்நாட்டின் தலையிடுதலால் கருத்துவேறுபாடு பாதுகாப்பின்மை மற்றும் அழிவு ஏற்படுகிறது” என்றார்.
அஹ்மதி நிஜாத் மீண்டும் அரேபியா வளைகுடாவின் பாதுகாப்பு குறித்து கூறும்பொழுது “ஒரு முதன்மையான கொள்கை வகுத்து அதில் அனைத்து வளைகுடா நாடுகளும் உறுதியாக நின்றால் மிகவும் ஸ்திரமான பாதுகாப்பு மிக்க பகுதியாக வளைகுடாவை நிறுவ ஈரான் ஒத்துழைக்கும்” என்றார்.
“இஸ்லாமிய குடியரசு நாடான ஈரான் அறிவிப்பது என்னவென்றால் தங்களுடைய இதயமாக உள்ள ராணுவ பாதுகாப்பு கொள்கைகள் குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்காகவே அன்றி எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்த இல்லை.” எனவும் அவர் உரையாற்றினார்.