சட்டவிரோத தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் மற்றும் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை வழங்கிய 15 ஆசிய நாட்டவர்களை நேற்று சார்ஜா பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் அண்மைய நாட்கள் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை
மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களுக்கு இது ஒரு பாரிய தலையிடியாக கூட மாறியிருக்கின்றது.. இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், போன்ற நாடுகளுக்கு மிக மிக குறைந்த கட்டணத்தில் தொலைபேசி அழைப்புகளை வழங்க கூடியவாறு தொலைபேசிக்கான மீள் நிரப்பு அட்டைகள், அதே போன்று தொலைபேசி அழைப்புகளை இங்குள்ள சில ஆசிய நாட்டவர்கள் வழங்கி வருகிறார்கள்.. இவர்கள் பற்றி ஷார்ஜா போலிசின் உளவுப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஷார்ஜாவின் பல பாகங்களிலும் களத்தில் இறங்கிய பொலிசார் சட்ட விரோதமாக செயற்பட்ட 15 நபர்களை கைது செய்துள்ளனர்.. இவர்களிடமிருந்து பெருமளவான மீள் நிரப்பு அட்டைகள், மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு நிலையங்கள் வழங்குகின்ற கட்டண அடிப்படையை விட மிகவும் குறைவான கட்டண அடிப்படையில் வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை இவர்கள் விநியோகம் செய்கின்ற தொலைபேசி அட்டைகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.. இதனால் அதிகமான ஆசிய நாட்டவர்கள் இவர்களின் மூலம் தங்களின் தொலைபேசி அழைப்புகளை சொந்த நாடுகளுக்கு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது..
ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று முதல் ஸ்கைப் மற்றும் வைபர் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றது. சட்டவிரோத தொலைபேசி வழங்குனர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்கும் இந்த சேவைகளில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என இங்குள்ள பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நன்றி : மடவல நியுஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக