இஸ்ரேல் காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஹமாஸ் இயக்கம் குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என கூறியிருந்தது.
இது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிடும் முயற்சியில்
லண்டன் பி.பி.சி நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் (வயது54) ஈடுபட்டார். அதில் ஹமாஸ் இயக்கத்தினர் குழந்தைகளையோ பாலஸ்தீன அப்பாவி பொதுமக்களையோ மனித கேடயங்களாக பயன்படுத்தவில்லை.
இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தைபலியாகும் அவலம் நேர்ந்து வருகிறது என கள நிலவரம் குறித்த உண்மை தகவல்களைவெளியிட்டார். தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்து வரும் பி.பி.சி செய்தி நிறுவனத்தால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் ஹமாஸ் இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறி அவரை பொறுப்பாசிரியர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகளை ஜெராமி பவன் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணித்து வருபவர். இதனாலேயே பி.பி.சி செய்தி நிறுவனத்தில் இவருக்குஅப்பிராந்தியத்தின் பொறுப்பாசிரியர் பதவியும் வழங்கப்பட்டது.
மேலும் ஆர்.டி.எஸ். தொலைக்காட்சியின் சிறந்த ஊடகவியலாளர் விருதை கடந்தாண்டுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி நீக்கத்திற்கு பின்னணியில் இஸ்ரேல் ஆதரவு அரசியல் இருப்பதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே இங்கிலாந்து அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு எதிராகஅந்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அந்நாட்டின் பெண் அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு கண்டனம் தெரிவித்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக