Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

பெரம்பலூர் அருகே பஸ்சில் குண்டு வெடிப்பு ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்க வைத்தது கண்டுபிடிப்பு! 71 பயணிகளிடமும் தனித்தனியே விசாரணை!

பெரம்பலூர் அருகே பஸ்சில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டு வெடிக்க வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து கடந்த 14ம் தேதி இரவு திருச்சி மாவட்டம் துறையூருக்கு தனியார் பஸ் புறப்பட்டது. மாவிலங்கை பகுதியை சேர்ந்த சந்திரன் (28) பஸ்சை ஓட்டினார். கண்டக்டராக குரும்பலுரைச் சேர்ந்த ராஜேஷ் இருந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி லாடபுரம் பிரிவு பாதை அருகே சென்ற போது, டிரைவர் சீட்டுக்கு பின்புறம் 4வது சீட்டுக்கு அடியில் பெட்ரோல் குண்டு வெடித்தது. பதறிய டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பயணிகள் அலறி அடித்து இறங்கி ஓடினர். இதில் பயணிகள் 9 பேர் காயமடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
ஐஜி ராமசுப்பிரமணி தலைமையில் உயர் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். சுதந்திர தினத்துக்கு முதல்நாள் இது நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து டிரைவர், கண்டக்டர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ஈச்சம்பட்டியில் அந்தப் பகுதிக்கு தொடர்பே இல்லாத 4 பேர் கையில் பையுடன் ஏறியது தெரிய வந்தது. இதனால் பெட்ரோல் குண்டுகளை அவர்கள் தான் கொண்டு வந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். அவர்கள் யார், எப்படி இருந்தார்கள், என்ன உடை உடுத்தியிருந்தார்கள் என டிரைவர், கண்டக்டரிடம் பெரம்பலூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறிய அங்க அடையாளங்களைக்கொண்டு ஈச்சம்பட்டியில் ஏறிய 4 பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அவர்களை பிடித்த பிறகு தான் இந்த பெட்ரோல் குண்டு தொடர்பான தகவல் கிடைக்கும் என போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.
குற்றவாளிகளை பிடிக்க எஸ்பி சோனல்சந்திரா மேற்பார்வையில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ தலைமையில் 15 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் வெடி குண்டு ரிமோட் மூலம் இயக்கப்பட்டு வெடிக்க வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பஸ்சில் கைப்பற்றப்பட்ட ஜெலட்டின், இரும்பு துகள்கள் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. பஸ்சில் பயணம் செய்த 71 பேர் நடத்துனரால் அடையாளம் காணப்பட்டு அவர்களிடமும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் க்யூ மற்றும் குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக